ஆழ் மனதின் அற்புத சக்திகள்! - Almanathin Arpudha Sakthigal e-book

ஆழ் மனதின் அற்புத சக்திகள்! - Almanathin Arpudha Sakthigal e-book
Categories : E-books  ,  Self Improvement
Author: N.Ganesan
Publisher: Nammabooks E-Publishing Media
Price: Rs.250 Rs.160
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

விபத்துகளை முன்கூட்டியே

அறிந்த ஆழ்மனசக்தி!

ஆகாய ஆவணங்கள்!

எண்ணப் புகைப்படங்கள்!

உடலின் மீது ஆழ்மனதின் தாக்கம்!

தொடாமலே  பொருட்களை நகர்த்துதல்!

ஆவிகளுடன் தொடர்பு!

நோய்களைத் தீர்க்கும்

ஆழ்மனசக்தி!

போன்ற விறுவிறு, வியப்புமிகு

கட்டுரைகளுடன் ஆழ்மனசக்தி

குறித்து உலகெங்கும் நடந்து வரும்

ஆராய்ச்சிகள், ஆழ்மனசக்தி

நிலை அடைய உதவும்

தியானங்கள், பயிற்சிகள்

ஆகியவற்றை விளக்கும் அரிய நூல்.

 

தினமலர் (திருச்சி) 30.01.2013.

செய்தித்தாளில் வந்த விமர்சனம்:

ஆழ்மனதின் அற்புத சக்திகள் பற்றி நமது பாரம்பரியப் பொக்கிஷமான பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் மற்றும் எகிப்து, திபெத்தின் பழங்கால நூல்களில் விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆறிவியலுக்கு சவால் விடும் இந்த அற்புத சக்திகள் பற்றி அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி என பல நாடுகளிலும் உள்ள ஆய்வு மையங்களிலும் வெளிப்படையாகவும் ரகசியமாகவும் பல சோதனைகள் நடந்து வருகின்றன. இவை பற்றிய விரிவான தகவல்களை நூற்றுக்கணக்கான  ஆதாரங்களுடன் அறிமுகப்படுத்தி சிலிர்ப்பூட்டுகிறது இந்த நூல்.

ஆகாய ஆவணங்களில் இருந்து தகவல்களைப் பெற்றவர், விபத்துகளை முன்கூட்டியே அறிவித்தவர், ஆழ்மன சக்தியால் நோய்களைத் தீர்த்தவர், இறந்தவர்களைன் குரலில் பேசியவர், மறுபிறவி தகவல்கள், ஆவிகளைத் தொடர்பு கொண்டவர்கள், செத்துப் பிழைத்தவர்களின் அதிசய அனுபவங்கள், எண்ணங்களின் அற்புதப் புகைப்படங்கள் போன்ற தகவல்களை விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார் என்.கணேசன்.

வியப்பூட்டும் தகவல் தொகுப்பாக நூலை நிறுத்திவிடாமல், ஆழ்மன சக்தியை அடைய உதவும் மந்திர தியானம், சுக்ரா தியானம், விபாசனா தியானம், திபெத்திய தியானம் போன்ற தியானப் பயிற்சி முறைகளையும் இணைத்திருப்பது பாராட்டுக்குறியது.

 
நூலாசிரியர் என்.கணேசன் பற்றி...

பூர்வீகம் கர்நாடக மாநிலம்

மங்களூரில் இருக்கும்

அத்தூர் என்ற கிராமம்.

பிறந்தது, வளர்ந்தது,

படித்தது, வங்கி ஒன்றில்

வேலை பார்ப்பது, வசிப்பது

எல்லாம் கோயமுத்தூரில். 

புகழ்மிக்க பல தமிழ், ஆங்கில

இதழ்களில்  எழுதியுள்ள

இவரது படைப்புகள்,

இலக்கியச் சிந்தனை உட்பட

பல அமைப்புகளின்

பரிசுகளைப் பெற்றுள்ளன.

‘பிரமிடுகள் தேசத்தில்

ஞானத் தேடல்’ எனும்

இவரது நூல் வாசகர்களிடம்

பெரும் வரவேற்பைப்  பெற்று

வருகிறது.

இணையதளத்தில்

தொடர்ந்து எழுதி வரும்

இவருக்கு ஏராளமான

ரசிகர்கள் உள்ளனர்.

 

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:Featured Publishers
 • Sandhya Publications
 • Narmadha Padhippagam
 • Gowra Puthaga Maiyam
 • Sixth Sense Publications
 • Prema Pirasuram
 • Kavitha Publications
 • Kalachuvadu Pathipagam
 • Vikatan Media Services
 • Ethir Veliyedu
 • Giri Trading
 • Sri Ramakrishna Math
 • Vanathi Publications
 • Thirumagal Nilayam
 • Isha Foundation
 • Puthiya Thalaimurai
 • Manjul Publishing House
 • Kizhakku Pathippagam
 • Kannadasan Pathipagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved