All products sold at nammabooks.com are 100% brand new and original books
Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping
மறுவாழ்வுக்கு தயாராகுங்கள்! ‘சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாமே தவிர, அதை முழுமையாக குணப்படுத்த முடியாது’ என்றுதான் ஆங்கில மருத்துவம் நமக்கு திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது. இந்நிலையில், ‘சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.. அதுவும், மருந்து மாத்திரையே இல்லாமல், என்று பார்த்தபோது, ஆச்சரியமாக இருந்தது. உணவு மூலமாகவே சர்க்கரை நோயை ஏதோ சளி, காய்ச்சல்போல குணப்படுத்திக்கொண்ட இதன் எக்கச்சக்க உறுப்பினர்களின் மறுவாழ்வு அனுபவங்களை படிக்கப் படிக்க.. ஆச்சரியம் மெல்ல மெல்ல நம்பிக்கையாக நிலைகொண்டது. ஒரு எச்சரிக்கை: டயட்டை தொடங்கும் முன்பு உங்கள் டாக்டரின் அறிவுரையைக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த டயட்டில் ரத்த சர்க்கரை அளவு இறங்கும் என்பதால், சர்க்கரை நோய்க்காக சாப்பிட்டு வரும் மாத்திரை அளவை அதற்கு தகுந்தபடி மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துக்கொள்வது அவசியம். வேறு ஏதாவது வியாதிகள் (உதாரணம்: கிட்னி பிரச்னை) இருப்பவர்கள், மருத்துவ ஆலோசனை இன்றி இதை பின்பற்றவேண்டாம்.சர்க்கரை நோய் விடைபெற்று ஓடட்டும்! இல்லங்கள்தோறும் ஆரோக்கியம் நிலைபெறட்டும்!