நீங்களாகவே பிளாக் வடிவமைப்பது எப்படி-Neengale Blog Vadivamaipathu epadi

நீங்களாகவே பிளாக் வடிவமைப்பது எப்படி-Neengale Blog Vadivamaipathu epadi
Categories : E-books  ,  Self Improvement  ,  Computer
Author: Compcare K.Bhuvaneswari
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.100
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

பிறப்பிலேயே நம் ஒவ்வொருவரிடத்திலும் எழுதுவது, பாடுவது, வரைவது என்று ஏதேனும் ஒரு திறமை, நம்மில் எங்கோ ஒரு மூலையில், சிறிய விதைபோல மறைந்திருக்கும். அந்த விதையைக் கண்டெடுத்து, தண்ணீர் ஊற்றி விருட்சமாக வளர்த்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பலருக்கு பள்ளி நாட்களில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக் கிட்டியிருக்கும். அவர்கள் கல்லூரி நாட்களில் அவற்றை வளர்பிறையாக வளர்த்திருப்பார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கை சற்றே திசைமாறி தொழில், வேலை, குடும்பம், குழந்தை என செட்டில் ஆன பிறகு, அவர்களின் ஆர்வமும் திறமையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்பிறையாக மறைந்து, வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் சுத்தமாகத் தொலைந்தேபோய்விடுவதுதான் அப்பட்டமான உண்மை. இப்படிப்பட்டவர்கள், வாழ்க்கையில் தங்கள் கடமைகளை முடித்த பிறகு, சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிதானிக்கும் நேரத்தில், திரும்பவும் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முனையும்போது, வாய்ப்புக் கிடைக்காமல் தவிப்பார்கள். இனி கவலையில்லை. வளர்ந்துவரும் தொழில்நுட்பப் புரட்சியில், இன்டர்நெட் என்ற மகத்தான சேவையைப் பெற்றோம். இதில் உருவானதுதான் ‘பிளாக்’. ஆம். இன்டர்நெட்டில் வெப்சைட்டுகளில் பிளாக் மூலம் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், தங்களது கருத்துக்களை, எண்ணங்களை, திறமைகளை அரங்கேற்ற முடியும். நினைத்த நேரத்தில் பப்ளிஷ் செய்துகொள்ள முடியும். நேரம் இல்லை என்ற கவலை வேண்டாம். யார் நம் படைப்புகளைப் பிரசுரம் செய்வார்கள் என்ற தாழ்வுமனப்பான்மை வேண்டாம். நம் டேபிள் மீது உள்ள டைரியில் எழுதுவதைப்போல, தினம் தினம் பிளாகுகளில் நம் கருத்துக்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், திறமைகள் போன்றவற்றை எழுத்து, படம், ஆடியோ, வீடியோ என அனைத்துவிதமான வடிவங்களிலும் வெளிப்படுத்திக்கொள்ள பிளாக் உதவுகிறது. பிளாகில் நம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதைப்போல, பார்வையாளர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள வசதி உள்ளது. உலக அளவில் அனைவரும் அரங்கேறும் அரங்கேற்ற மேடையாகவும், தனி நபரது பெர்சனல் டைரியாகவும் விவாத அரங்காகவும் பிளாக் விளங்குகிறது. இன்டர்நெட்டில் பிளாகை உருவாக்கிக்கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாகக் கிடைக்கும் அற்புதமான வசதி இது. நம் ஒவ்வொருவரிடத்திலும் தொலைபேசி எண், மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரி இருப்பதைப்போல, இன்றைய இன்டர்நெட் தொழில்நுட்ப உலகில், நம் ஒவ்வொருவருக்கும் பிளாக் முகவரியும் இனி அவசியமாகிறது. 24 வருட தொழில்நுட்ப அனுபவத்தில் சாஃப்ட்வேர் நிறுவன சி.இ.ஓ ஆகவும், தொழில்நுட்ப வல்லுநராகவும் விளங்கும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் காம்கேர் கே. புவனேஸ்வரி பிளாக் வடிவமைப்பது குறித்து இந்த புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Narmadha Padhippagam
  • Vikatan Media Services
  • Sri Ramakrishna Math
  • Manjul Publishing House
  • Ethir Veliyedu
  • Sixth Sense Publications
  • Sandhya Publications
  • Isha Foundation
  • Vanathi Publications
  • Prema Pirasuram
  • Kizhakku Pathippagam
  • Puthiya Thalaimurai
  • Kannadasan Pathipagam
  • Thirumagal Nilayam
  • Kalachuvadu Pathipagam
  • Kavitha Publications
  • Gowra Puthaga Maiyam
  • Giri Trading
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved