திருஞானசம்பந்தர் கதைகள்

திருஞானசம்பந்தர் கதைகள்
திருஞானசம்பந்தர் கதைகள்
Categories : E-books  ,  Religion & Spirituality  ,  Computer
Author: Compcare K.Bhuvaneswari
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.110 Rs.75
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

பாலறா வாயினராக ஈசனைப் பரவிப் போற்றப் புறப்பட்ட திருஞானசம்பந்தரின் வரலாற்றைக் கூறுகிறது இந்நூல். இதில் சம்பந்தரின் தோற்றம் முதல் அவர் தமது 16 வயதில் ஈசனோடு இணையும் காலம் வரை உள்ள வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தையும் வாசகரின் கைப் பிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொரு காட்சியாக எளிய தமிழில் விளக்கிக் காட்டுகிறார் ஆசிரியர் காம்கேர் கே. புவனேஸ்வரி. பதினாறே ஆண்டுகள் வாழ்ந்த சம்பந்தரின் வாழ்க்கையை அவர் வயதையொத்த இளைஞர்களுக்கு விளக்குவதே தமது நோக்கம் என்று குறிப்பிடும் நூலாசிரியர், தனது அந்த நல்ல நோக்கத்தை இனிதே நிறைவேற்றுகிறார் எனலாம். சம்பந்தரின் வரலாற்றுக்குச் செல்லும் முன் தேவாரத்தை உள்ளடக்கிய திருமுறைகளின் தோற்றம், திருமுறைகளைப் பாடியவர்கள் பற்றிய விவரம் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பின்னர் திருஞானசம்பந்தரை அறிமுகப்படுத்துவது, அதையும் திட்டமிட்டு சட்டமிட்டு எளிய முறையில் விளக்குவது நூலின் உள் நுழைய வாசகனுக்கு ஊக்கத்தை அளிக்கும் நல்ல உத்திகள். ஞானசம்பந்தரின் முதல் பாடலின் சிறப்பை விளக்கிய பின் ஆசிரியர் ஞானசம்பந்தர் பாடிய தலங்களுக்கெல்லாம் வாசகரை இட்டுச் செல்கிறார். ஒவ்வொரு தலத்தின் மகிமை, உறையும் இறைவன் – இறைவியர், பிற சிறப்புகளைக் கூறி, பொற்றாளம் கொடுத்த தலம், முத்துச் சிவிகை அளித்த தலம் என்று ஈசன் தன் பிள்ளையை எப்படிப் போற்றிப் பாராட்டினான் என்பதையும் லயிப்புடன் விளக்குகிறார். புதுமையான சமுதாயச் சிந்தனைகளையும் சம்பந்தர் கொண்டிருந்தார் என்பதையும் இந்நூல் விளக்குகிறது. ஞானசம்பந்தரின் பெருவாழ்வு மல்டிமீடியாவாகவும், அனிமேஷன் படமாகவும் வர முயற்சி செய்வதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அவற்றை வரவேற்று ஆதரிக்கத் தயாராவோம். இறைவன் தொண்டில் சுவாமி விமூர்த்தானந்தர் ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Gowra Puthaga Maiyam
  • Kannadasan Pathipagam
  • Kalachuvadu Pathipagam
  • Isha Foundation
  • Vanathi Publications
  • Vikatan Media Services
  • Kizhakku Pathippagam
  • Puthiya Thalaimurai
  • Sri Ramakrishna Math
  • Thirumagal Nilayam
  • Kavitha Publications
  • Sixth Sense Publications
  • Prema Pirasuram
  • Manjul Publishing House
  • Sandhya Publications
  • Ethir Veliyedu
  • Narmadha Padhippagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved