ஒற்றை வைக்கோல் புரட்சி - Otrai Vaikkol Puratchi e-book

ஒற்றை வைக்கோல் புரட்சி - Otrai Vaikkol Puratchi e-book
Categories : E-books  ,  Agriculture&Environment
Author: Masanobu Fukuoka
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.120 Rs.84
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

மாசானபு ஃப்கோகா என்றொரு எளிய மனிதரால் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டு உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிட்டுள்ளார்கள். விவசாய பூமியான நமது தேசம் இப்போது எதை நோக்கி பயணிக்கிறோம் என்று இலக்கில்லாமல் பயணித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நம்மாழ்வார் போன்ற நமது ஆசான்கள் நமது பாரம்பரிய விவசாயத்தை காக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு லிட்டர் பாலின் விலையைவிடவும் அதே அளவு தண்ணீருக்கு அதிக விலைகொடுத்து கூச்சமில்லாமல் வாங்கப் பழகிவிட்டோம். எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன கொடுமைகளை சந்திக்கபோகிறோமோ?.
 
இந்தப்புத்தகம் இயற்கை வேளாண்மை பற்றி மட்டும் பேசாமல் பாரம்பரியம், கலாசாரம், உணவு பழக்கவழக்கங்கள் பற்றியும் ஆராய்கிறது. யகொஹோமா கஸ்டம்ஸ் பீரோவில் தாவர சோதனைப்பிரிவில் வியாதிகளை பரப்பும் பூச்சிகள் உள்ளனவா எனும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மாசானபு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது சொந்தக்கிராமத்தில் வந்து விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். முதலில் கடுமையான நஷ்டத்தினை ஏற்ப்படுத்திய இவரது விவசாய முறையைப்பார்த்து அவரது தந்தையார் கடிந்துகொள்ள, அவரது சிந்தனை வேறு மாதிரியாக இருந்தது.  அவர் சொல்கிறார் "நான் ஒரு மகிழ்ச்சியான, இயற்கையான வேளாண்மை முறையை கண்டுபிடிக்கவும். அதன் மூலம் வேலைப்பளு குறையவும் குறியாயிருந்தேன். அல்லது "இதைச் செய்யாமல் இருந்தால் என்ன?" என்றே எனது சிந்தனை இருந்தது என்கிறார்.
 
இறுதியாக தனது நிலத்தை உழத்தேவையில்லை, செயற்கை உரங்கள் போடத்தேவயில்லை, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க தேவையில்லை, இப்போது நடைமுறையில் இருக்கும் பெரும்பாலான வேளாண்மை முறைகள் தேவையில்லை என முடிவு செய்கிறார். அதனை சோதனை செய்து பார்க்கும்போது ஒரு சமச்சீரான நெல் வயல் சூழலமைப்பு என்பதே பூச்சிகளாலும், தாவரக் குடும்பங்களும் நிரந்தர உறவைக்கொண்ட ஒரு அமைப்பாகும். இப்பகுதியில் தாவர நோய்கள் தாக்குவது அசாதரணமான விசயமாக இருந்தாலும், அதனால் பயிர்வகைகள் பாதிக்கப்படுவதில்லை எனக் கண்டறிந்தார்.
 
அவர் நான்கு அடிப்படைகளை முன்வைக்கிறார். முதலாவதாக மண் பதப்படுத்துதல் கிடையாது. அதவாது நிலத்தை உழுவதோ, புரட்டிப்போடுவதோ செய்தல் கூடாது. இரண்டாவது வேதியியல் உரங்களோ, நாமே தனியாக தயாரித்த தழை உரங்களோ போடக்கூடாது. மூன்றாவது களையெடுப்போ, களைக்கொல்லி உபயோகமோ செய்தல் கூடாது. நான்காவது இயற்கையை அதன் போக்கில் விடுவது. அதாவது நிலத்தை நாம் அதன் தொன்மை மாறாது பயன்படுத்துவது.
 
இவர் காய்கறி வளர்ப்பையே காட்டுச்செடிகளைபோல தன் இயல்பில் விட்டுவிடவேண்டும் எனச்சொல்கிறார். முல்லைக்கு தேர் தந்த வள்ளல் பரம்பரையான நமக்கு இது ஏற்றுக்கொள்ளமுடியாத விசயமாக இருந்தாலும் காட்டில் விளைகின்ற பழங்களை, காய்களை நீங்கள் யாராவது சாப்பிட்டு இருந்தால் மாசானபு சொன்னது உண்மைதான் என ஒத்துக்கொள்வோம். நம்மில் சப்பாத்திக்கள்ளிப் பழம் எத்தனை பேர் சாப்பிட்டுருப்போம்..
 
மிகச்சிறிய அளவில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயி, மிக எளிய அர்த்தமுள்ள வாழ்வை வாழ்கிறான். வெகு காலத்திற்குமுன்பு, ஒரு ஏக்கர் நிலம் மட்டும் வைத்திருக்கும் விவசாயி வருடமுடிவில் குன்றுகளில் முயல் வேட்டையாடியபடி ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களை கழித்தான் அவன் ஏழையாக இருந்தாலும் அவனுக்கு இப்படிப்பட்ட சுதந்திரம் இருந்தது. இந்தப் புதுவருட விடுமுறை  மூன்று மாதத்தில் இருந்து இரண்டாகி, ஒன்றாகி, இன்று வெறும் மூன்று நாள்களாக மாறிவிட்டன என ஜப்பானிய விவசாயிகள் பற்றி பேசுகிறார்.
 
"இளவேனில் என்பது மழையைக் கொண்டு வருமா? புயலைக்கொண்டு வருமா? என எனக்குத்தெரியாது ஆனால், நான் இன்று என் நிலத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறேன்" இது ஒரு பழைய நாட்டுப்பாடல் இதிலிருந்து வேளாண்மை ஒரு வாழ்க்கைமுறை என விளக்குகிறார். 
 
அவரிடமிருந்த இளைஞர்கள் இந்தியாவில் காந்தி கிராமத்திற்கும், இஸ்ரேலில் கிபுட்ஸ்க்கும்,அமெரிக்க பாலைவனம் மற்றும் மலைகளில் வசிக்கும் கூட்டுச் சமூகத்துக்கும் சென்று பார்வையிட்டு வந்திருக்கின்றனர். 
 
செறிவற்ற உணவு, சாதாரண உணவு, கொள்கை உணவு, இயற்கை உணவு, என உலகின் முக்கியமான நான்குவகை உணவுப் பழக்கத்தை விரிவாக அலசியிருக்கிறார்.  மனிதனைப்போல அறிவுடைய விலங்கு எதுவுமில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இந்த விவேகத்தால் மக்கள் அணு ஆயுதப்பரவலைத்தான் நடைமுறைப்படுத்தியுள்ளனர் என்று சாடுகிறார்.
 
ஒரு ஏக்கர் நிலத்தில் நான்குபேர் கொண்ட குடும்பம் ஒன்று நாளொன்றுக்கு ஒருமணி நேரம் மட்டும் திட்டமிட்டு உழைத்தால், அவர்கள் தன்னிறைவு அடையும் அளவுக்கு அவர்களால் பயன்பெற முடியும் என உறுதியாக சொல்கிறார். உழைப்பு ஒன்றையே பிரதானமாக, பெருமையாக கருதும் ஜப்பானியர்கள் மத்தியில், ஏன் தேவையின்றி இவ்வளவு உழைக்க வேண்டும் என மனிதர்களை எள்ளி நகையாடும் மாசானபு எனக்கு ஆதர்சமாகதான் தெரிகிறார்.
 
ஒரே ஒரு வைக்கோல்!
 
இந்த வைக்கோல் சிறியதாகவும், இலகுவாகவும் தெரிகிறது. இது எவ்வளவு கனமுடையதாக இருக்கும் என்பதுகூட பலருக்கு தெரியாது. இந்த ஒற்றை வைக்கோலின் உண்மையான மதிப்பை மக்கள் புரிந்துகொண்டால், இந்த நாட்டையே, ஏன் இந்த உலகையே உலுக்கி விடக்கூடிய ஒரு மனிதப் புரட்சியே உருவாகும்.  
 
 

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Prema Pirasuram
  • Giri Trading
  • Kannadasan Pathipagam
  • Thirumagal Nilayam
  • Narmadha Padhippagam
  • Sandhya Publications
  • Ethir Veliyedu
  • Kizhakku Pathippagam
  • Vanathi Publications
  • Vikatan Media Services
  • Sixth Sense Publications
  • Kalachuvadu Pathipagam
  • Isha Foundation
  • Manjul Publishing House
  • Puthiya Thalaimurai
  • Sri Ramakrishna Math
  • Kavitha Publications
  • Gowra Puthaga Maiyam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved