ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 25.4.2012 அன்று ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடான ‘இராமாநுசர் ஆயிரம்’ – (முதல் மூன்று பாகங்கள்) – 671 தலைப்புகள் கொண்ட நூல் வெளியீடு. ஸ்வாமி எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு அவதார திருநக்ஷத்திரோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘இராமாநுசர் ஆயிரம்’ என்ற நூல் (9 பாகங்கள்) நந்தன மற்றும் விஜய ஆண்டுகளில் (கி.பி. 2012 மற்றும் 2013) வெளிவர உள்ளன. இராமாநுசரின் – வாழ்க்கை – வரலாறு – அவர் அருளிச் செய்த நூல்கள், அவருடைய பெருமைகளை பறைசாற்றும் துதிநூல்கள், இராமாநுசருடைய சமுதாயச் சிந்தனைகள், கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்கள், அர்ச்சையில் அவருக்கு நடைபெறும் வைபவங்கள், அவர் அருளிச்செய்த வேதாந்த ஸாரம் என்னும் நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கலைக்களஞ்சியமாக (உணஞிதூஞிடூணிணீச்ஞுஞீடிச்), இந்த நூலின் முதல் மூன்று பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு குடைக்கீழ் அனைத்து குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு வெளியீட்டில் இராமாநுசர் அருளிச்செய்த வேதாந்த ஸாரத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு வெளியீட்டில் இராமாநுசருடைய மற்றைய க்ரந்தங்களான வேதார்த்த ஸங்க்ரஹம், ஸ்ரீபாஷ்யம், வேதாந்ததீபம், கத்யத்ரயம், நித்யம் ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு, இன்னும் சில வரலாற்று நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள், பல திவ்யதேசங்களில் இராமாநுசருடைய அர்ச்சா திருமேனிக்கு அளிக்கப்பட்டு வரும் மரியாதைகள், இராமானுசரின் சீரிய மேலாண்மைக் கொள்கைகள், ராமாநுஜ ஸம்பிரதாயம் தமிழ் நாடு தவிர்ந்த மற்றைய தென் வடமாநிலங்களில் நிலை கொண்ட விதம் ஆகியவை இடம் பெற உள்ளன.