பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை? - Panathai Ilaka Sirandha Idam Pangusandhai? e-book

பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை? - Panathai Ilaka Sirandha Idam Pangusandhai? e-book
Categories : E-books  ,  Others
Author: Bilal
Publisher: Nammabooks E-Publishing Media
Price: Rs.100
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிகமாகச் சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்தில் டிரேட் செய்பவர்களா? இந்த நூல் உங்களுக்கானது தான்! 

அரசு, மீடியாக்கள், புரோக்கர்கள், 

டிப்ஸ் கொடுப்பவர்கள் மற்றும்
டிரெயினிங் கொடுப்பவர்களைத் 
தவிர உண்மையில் 
பங்குச்சந்தையால் யாருக்கு லாபம்? 
         
பங்கு வணிகத்தில் பியூச்சர் டிரேடிங், 
ஆப்சன் டிரேடிங், ஹெட்ஜிங்,
கம்மாடிட்டி டிரேடிங், கரன்சி டிரேடிங் 
எனப் பலவிதம் உண்டு. அவற்றில் 
உள்ள சாதக பாதகங்கள் 
என்னென்ன?
         
வீடு + நகை + பேங்க் பேலன்ஸ்
- பங்கு வர்த்தகம் 
= கடன் சுமை + அவமானம் மட்டுமே 
கைம்மாறாகப் பெறும் அவலநிலை 
ஏன்?
 
புரோக்கர், சப் புரோக்கர், ஆன்லைன் 
வர்த்தகம், சென்செக்ஸ் போன்றவை
குறித்த பதிவுகள்...
 
மேலும், சிந்திக்க வைக்கும் பல 
செய்திகளை உள்ளடக்கியது இந்நூல்!
 
நூல் குறித்து தினத்தந்தி (27-04-2011) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:
 
பங்கு மார்க்கெட்டில் மக்கள் பங்கு கொள்வது என்பது மிகவும் சாதாரணமாகி விட்டது. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம், எவ்வாறு முதலீடு செய்வது? என்ற நோக்கில் ஏராளமான நூல்கள் வெளிவரும் வேளையில், பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச் சந்தை? என்ற கேள்விக்குறியோடு இந்த நூலை பிலால் எழுதியுள்ளார்.
 
ஆதாயம் கிடைக்கும் என்ற ஆசையில், பங்குச்சந்தையில் முதலீட்டாளராக பங்குகொண்டு சிரிய சேதாரத்தோடு கரை சேர்ந்த அவர், பல ஆண்டுகள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். பங்குச் சந்தையில் பங்கு கொள்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
 
நூலாசிரியர் பிலால் பற்றி...
 
வணிகவியல் பயின்ற இவர், பத்து 
ஆண்டுகளுக்கு முன் 
பங்குச்சந்தையில் ஒரு 
முதலீட்டாளராக கால் வைத்தவர். 
தொடர்ந்து அதன் ஆபத்து நிறைந்த 
ஆழம் வரை துணிச்சலாக நீந்தியவர். 
கிடைத்த ‘கேப்’பில் கொஞ்சம் 
சேதாரத்தோடு கரை தப்பியவர். 
இப்பொழுதும் பங்கு வர்த்தகத்தில் 
சப் புரோக்கராக தொடர்ந்து 
கொண்டிருக்கிறார். 
இத்தொழிலில் ஏராளமான 
டிரேடர்களையும், ஏற்ற இறக்கமான 
பல்வேறு சூழல்களையும் நேரடியாக 
சந்தித்ததின் மூலம் கிடைத்த தனது 
அனுபவங்களை 
அடிப்படையாகக்கொண்டு 
பங்குச்சந்தையின் பாதாள 
முகங்களை மறைக்காமல் 
பதிவு செய்துள்ளார். 

 

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kizhakku Pathippagam
  • Puthiya Thalaimurai
  • Vanathi Publications
  • Narmadha Padhippagam
  • Sandhya Publications
  • Vikatan Media Services
  • Sri Ramakrishna Math
  • Gowra Puthaga Maiyam
  • Kannadasan Pathipagam
  • Sixth Sense Publications
  • Kalachuvadu Pathipagam
  • Ethir Veliyedu
  • Manjul Publishing House
  • Kavitha Publications
  • Isha Foundation
  • Prema Pirasuram
  • Thirumagal Nilayam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved