நல்லுணவு நான் சொல்லுவேன்

நல்லுணவு நான் சொல்லுவேன்
Categories : Health & Medicine  ,  Cooking, Food & Diet  ,  Paleo Diet
Author: Neander Selvan
Publisher: Malligai Magal
Availability:
Price: Rs.50
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping



நியாண்டர் செல்வன் எழுதிய..
நல்லுணவு நான் சொல்லுவேன்!

அரசின் எந்த ஒரு அதிகாரத்திலும் இல்லாமல், சமூக அமைப்புகளின் பின்புலமும் இல்லாமல், தேச எல்லைக்கு அப்பால் வெகுதொலைவில் வசிக்கும் ஒருவர்.. தான் பிறந்த மண்ணில் ஒரு ஆரோக்கியப் புரட்சியை நடத்திடமுடியும் என்று யாராவது சொன்னால், வெற்றுக் கற்பனை என்று புறம்தள்ளத்தான் தோன்றும். ஆனால், இதை நிஜமாக்கி, மிகப்பெரும் சாதனையே நிகழ்த்தி இருக்கிறார் நியாண்டர் செல்வன்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செல்வன், அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரியும் பேராசிரியர். ஒரே சமயத்தில் தன்னை வீழ்த்தப் பார்த்த சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகியவற்றால் அதிர்ந்து, அவற்றுக்கு உணவு முறை மூலம் தீர்வு தேடினார். அதை கண்டுணர்ந்தவர், செயல்படுத்திப் பார்த்து முழுகுணமும் அடைந்தார். அடுத்து, தான் பெற்ற இன்பத்தை தன் மண்ணின் மக்களும் பெறவேண்டும் என்று முகநூலில் தமிழ்க் குழு ஒன்றைத் தொடங்கி, உணவு பற்றி தான் உணர்ந்த அறிவியல்பூர்வ உண்மைகளை பதிவிட்டு வர.. இன்று அந்தக் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இவர் முன்மொழியும் பேலியோ டயட்டால் பயன் பெற்றவர்களின் நெகிழ்ச்சி வாக்குமூலங்களால் நிரம்பி வழிகின்றன, குழுவின் பக்கங்கள். அத்தனையும் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் என்ற துல்லியமான ஆதாரங்களோடும் புகைப்படங்களோடும் பதிவானவை என்பதே இதன் நம்பகத்தன்மைக்கு சான்று. 

இவர் கருத்துகளின் அடிப்படையில், சர்க்கரை நோய், அதிக உடல் எடை சிக்கல்களிலிருந்து மீண்டவர்களின் அனுபவங்களை வைத்து மல்லிகை பிரசுரம் வெளியிட்ட ‘சர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை’ மற்றும் ‘எடையைக் குறைக்கும் பேலியோ டயட்’ நூல்கள் பெரும் வரவேற்பு பெற்று, தமிழகத்திலிருந்தே இந்த பாதிப்புகளை விரட்டும் அபார பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வழியில்.. பேலியோ டயட்டில் இது எங்களின் 3வது வெளியீடு.

ஆரோக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருக்கும் செல்வனை வாழ்த்தி, உங்களின் புத்துணர்ச்சிப் பயணத்தை தொடங்குங்கள். இல்லங்கள்தோறும் ஆரோக்கியம் நிலைபெறட்டும்!

 

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Vikatan Media Services
  • Prema Pirasuram
  • Giri Trading
  • Kavitha Publications
  • Puthiya Thalaimurai
  • Vanathi Publications
  • Sixth Sense Publications
  • Kannadasan Pathipagam
  • Ethir Veliyedu
  • Sri Ramakrishna Math
  • Manjul Publishing House
  • Sandhya Publications
  • Narmadha Padhippagam
  • Gowra Puthaga Maiyam
  • Kizhakku Pathippagam
  • Isha Foundation
  • Kalachuvadu Pathipagam
  • Thirumagal Nilayam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved