• 1975
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட.இரா.முருகனின் புனைவுமொழி பொதுவான எழுத்துகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. தனித்தன்மை கொண்டது. இந்நாவலுக்கான களத்துடன் அவரது மொழிநடை ஆகச்சிறந்த அளவில் இயைந்து போகிறது.எமர்ஜென்ஸியைப் பின்னணியாக வைத்து தமிழில் இத்தனை விரிவான நாவல் இதுவரை வந்ததில்லை. இவ்வரலாற்றை நேரில் கண்டவர் என்ற முறையிலும் பரந்துபட்ட அனுபவம் கொண்டவர் என்ற வகையிலும் இரா.முருகனின் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இந்நாவல் பல வகைகளில் திறப்பாக அமையும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

1975

  • ₹450


Tags: , இரா. முருகன், 1975