• 30 வகை அசத்தல் சமையல்
ஆசைக்கு அளவிடத் தெரியாத மனிதன் வயிற்றுக்கு அளவிட்டு, ‘போதும்... போதும்..!’ என்று வாயாறச் சொல்லக்கூடியது உணவை மட்டும்தான். வாழ்வின் ஜீவாதாராமாக விளங்கக்கூடிய உணவு வகைகளைச் செய்து பறிமாறும் சமையல் கலைக்கு ஈடு இணையாக வேறு எதையும் சொல்ல முடியாது. ஏதோ சமையல் செய்தோம் என்பதைவிட, சுவைபட செய்தோம் என்பதுதான் சிறப்பு. சமையலே தெரியாத பெண்களுக்குக்கூட சக்கைபோடு போட வைக்கும் அசத்தலான சமையல் செய்முறைகளைத் தந்துள்ளார் நூலாசிரியர் சாந்தி விஜயகிருஷ்ணன். நம்மை புத்தம் புது பொலிவோடு திகழ வைக்கும் பல்வேறு போளி வகைகள்; உடல் வசீகரத்தை வளைத்துபோடும் கேரட் ரெசிபிகள்; உடலைக் குளிர வைத்து நரம்புகளை பலப்படுத்தும் தயிர்_மோர் ரெசிபிகள்; கட்டுடல் கலையாதிருக்க கத்திரிக்காய் ரெசிபிகள்; மூளை வளர்ச்சிக்கு வேண்டிய வெண்டைக்காய் ரெசிபிகள் என அத்தனை வகைகளும் உங்களுக்காகவே! அதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கான சுவை மிகுந்த பதினாறு வகை ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் அசத்தல் ரகம். ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணனின் கைப்பக்குவத்தில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளிவந்த ருசியான உணவு வகைகள், தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக வெளி வந்துள்ளது. சாதாரண நாட்களில் மட்டுமல்லாது, பண்டிகை நாட்கள், பிறந்த நாட்கள் போன்ற சந்தோஷ தருணங்களில் சுவைமிகுந்த உணவைச் சமைத்து உறவை பலப்படுத்திட இந்த நூல் உங்களுக்குத் துணை புரியும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

30 வகை அசத்தல் சமையல்

  • ₹110
  • ₹94


Tags: 30, vagai, asathal, samayal, 30, வகை, அசத்தல், சமையல், சாந்தி விஜயகிருஷ்ணன், விகடன், பிரசுரம்