• 90களின் தமிழ் சினிமா-90galin Cinema
“அபிலாஷின் இந்த நூல், 90களில் வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலுத்தும் தாக்கம் பற்றியும் விவாதிக்கும் புத்தகம் என்பதே சரியானது. இத்திரைப்படங்கள் ஊடாக அபிலாஷ் மேற்கொள்ளும் நீண்ட நெடும் பயணம் மிக முக்கியமானது.ஒவ்வொரு திரைப்படத்தையும் அதன் உலகளாவிய, இந்திய, பிராந்திய அளவிலான சினிமாக்களுடன், அவற்றின் இடையேயான முன்பின் தொடர்ச்சியுடன் அபிலாஷ் அந்தரங்கமாகப் பார்த்திருக்கிறார். மிகப் பொறுமையாக ஒரு திரைப்படத்தின் பல்வேறு கோணங்களையும் சாத்தியங்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். உலக, மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் ஆழமான கவனம் உள்ளவர்களுக்கு மட்டுமே இப்படி ஒரு நூல் எழுதுவது சாத்தியம். திரைப்படங்கள் குறித்த மிக முக்கியமான பல ரசனைக்குரிய கட்டுரைகளைத் தொடர்ச்சியாக அபிலாஷ் எழுதி வருகிறார். வணிகத் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதே தீட்டு என்ற சூழல் இன்று தகர்க்கப்பட்டுவிட்டது. வணிகத்திரைப்படங்களை அவற்றுக்கான இலக்கணங்களுடனும் எல்லைகளுடனும் அணுகுவது அவசியமானதே. இதை மிகக் கறாராக நிகழ்த்திக் காட்டியுள்ளது இப்புத்தகம்.”

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

90களின் தமிழ் சினிமா-90galin Cinema

  • ₹120


Tags: , ஆர். அபிலாஷ், 90களின், தமிழ், சினிமா-90galin, Cinema