• ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே
கல்வித் துடிப்பிருந்தும் தெளிவில்லாது தடுமாறும் தமிழ்ப் பெற்றோர் - கல்விக் கொள்கையா கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையிலிருக்கும் அரசினர் அதிகார வர்க்கத்தினர் - துறைதோறும் துறைதோறும் தாழ்வுற்று வறுமை மிஞ்சிய தமிழகத்தை மீட்டுயர்த்தப் போராடும் தமிழ்த் தேசியர்கள் - சாண் ஏறினால் முழம் சறுக்குவது ஏனென்று தெரியாமல் திகைப்புறும் சமூகநீதிக்காரர்கள் - மதிப்புக்குரிய ஆசிரியப் பெருமக்கள் - மாண்பமைக் கல்வியாளர்கள்... அத்தனைப் பேரும் இந்நூலைக் கசடறக் கற்றுத் தெளிந்தால் கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை மீளக் காண்பதற்குத் தத்தமக்குரிய பங்களிப்புச் செய்யலாம். எளிய தமிழ்வழிக் கல்விப் பற்றாளராக எனக்கு அறிமுகமாகி, இந்நூலில் சமூகநீதிக் கல்வியாளராக மலர்ச்சி பெற்றுள்ள தோழர் நலங்கிள்ளியிடமிருந்து தமிழ்ச் சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது. அடியேனும் கூட.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே

  • ₹60


Tags: a, kalviyil, thalntha, tamilagame, , கல்வியில், தாழ்ந்த, தமிழகமே, நலங்கிள்ளி, எதிர், வெளியீடு,