• ஆளப்பிறந்தவர் நீங்கள்
தலைவர்கள் பிறக்கிறார்களா? அல்லது உருவாகிறார்களா? அவர்களை உருவாக்குவது யார்? எல்லோராலும் தலைவராக ஆக முடியுமா? தலைவர் ஆவதற்கு தேவையான பண்புகள் என்ன? அவற்றை முயன்று வளர்த்துக்கொள்ள முடியுமா? தலைவர்களின் பல்வேறுபட்ட வழிமுறைகள் என்ன? அவர்களது எப்படிப்பட்ட செயல்பாடுகள் வெற்றி கொடுக்கின்றன? ஒரு தலைமை எதனால் தோற்கிறது? வெற்றி பெற, தலைவனின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? தலைவர்கள் யாரைக் கலந்து செயல்படுகிறார்கள்? அவர்களின் சீடர்கள் யார்? அரசியலில் இருப்பவர்கள், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், கல்லூரி மாணவர்கள், தொழில் வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, லீடர்ஷிப் என்று அழைக்கப்படும் அதிமுக்கியமான விஷயம் பற்றிய அத்தனை விபரங்களையும் ஒன்றுவிடாமல் அள்ளித் தருகிறது இந்தப் புத்தகம். யூகங்களின் அடைப்படியில் இல்லாமல், உலக அளவில் லீடர்ஷிப் பற்றி நடந்துள்ள ஆராய்சிகளையும், வெற்றி பெற்ற தலைவர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் புனைகதைக்கு ஒப்பாக சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கிறார், சோம வள்ளியப்பன். அள்ள அள்ள பணம், காலம் உங்கள் காலடியில், இட்லியாக இருங்கள், உஷார் உள்ளே பார், சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?, மோட்டிவேஷன்– தள்ளு, உலகம் உன் வசம் போன்ற சூப்பர் ஹிட் வெற்றி நூல்களின் ஆசிரியரான சோம வள்ளியப்பனின் லீடர்ஷிப் பற்றிய இந்தப் புத்தகம் சந்தேகம் இல்லாமல் உங்களை ஒரு தலைவனாக்கப் போகிறது. மாபெரும் சபைகளில் நீங்கள் நடக்கும் போதெல்லாம் மாலைகள் விழுவதற்கு வழி செய்யப்போகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஆளப்பிறந்தவர் நீங்கள்

  • ₹278


Tags: aalapirandhavar, neengal, ஆளப்பிறந்தவர், நீங்கள், சோம வள்ளியப்பன், Sixthsense, Publications