அதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன இத்தொகுப்பின் கட்டுரைகள். சமூக உளவியலுக்கும் இக்கொலைகளுக்கும் இடையேயான உறவினையும் தமிழகம் ஈட்டியிருக்கும் சமூக நீதிப் பெயருக்கு முரணாக இக்கொலைகள் பற்றி நீடிக்கும் அரசியல் மௌனத்திற்கான காரணங்களையும் இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இன்று நமது அறிவுச்சூழலில் மேலோங்கியிருக்கும் - ‘குற்றச்சாட்டு x தீர்வு’ என முரண்பட்டு இயங்கும் விவாதமற்ற போக்குகளிலிருந்து விலகிக் கூர்மையான கேள்விகளையும் காரணங்களையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. கண்டனம், ஆவேசம், அடையாளம்சார் முழக்கம் ஆகிய அரசியல்வாதித்தனமான உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கடந்து இக்கொலைகளை விரிந்த பின்புலத்தில் வைத்து களநிலவரத்தையும் அறிவுலகையும் புரிந்துகொள்வதன் அத்தியாவசியத்தை வலியுறுத்துகிறது இத்தொகுப்பு.இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட காலங்களில் பரவலான கவனிப்பையும் விவாதத்தையும் பெற்ற கட்டுரைகளோடு சினிமா, புனைகதை, முகநூல் பதிவு, உண்மையறியும் அறிக்கை, நீதிமன்ற வழிகாட்டும் குறிப்பு ஆகியவற்றைத் தொட்டுப் புதிதாக எழுதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. ஆணவக் கொலை தொடர்பான விவாதத்திற்கு மட்டுமல்லாது அதற்கான ஆவணரீதியான கையளிப்பாகவும் இத்தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது-.As the increasing dishonour killings are gathering political support too, These articles present a detailed research on them.Contrary to the social justice pride of tamilnadu, the silence on political spaces about these killings and their relationship with the mindset of this society are discussed. Stepping away from the ‘complaint x Solution’ discourse prevalent in tamil intellectual circles, these articles pose sharp questions and reasons. Moving past opposition, angst, identity related shouts this collection underlines the need for understanding these killings in a vast field of reality.Including the articles that gathered widespread attention and created discussions, this collection also includes articles written on Cinema, Fiction, Facebook posts, Fact finding reports and Court notes. While provoking a discussion on the killings it also acts as a documenting of the current scenario.
Aanava Kolaikalin Kaalam
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹225
Tags: Aanava Kolaikalin Kaalam, 225, காலச்சுவடு, பதிப்பகம்,