அந்த மூதாட்டியை அடிக்கடி கோவிலில் பார்க்க முடிகிறது. குறைந்தது எழுபது வயது இருக்கும். வெளிப்பிரகாரத்தில் ஒரு கேள்விக்குறியின் வளைவுகளோடு முதுகு வளைந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். கைய்யில் ஒரு பழைய பை. அருகில் யாரும் இல்லை. எப்பொழுதும் வாய் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்து கொண்டிருக்கிறது. கண் நிலைகுத்தி வானத்தை நோக்குகிறது. ஒவ்வொரு தடவை பார்க்கும்போதெல்லாம் எனது ஆச்சியை(பாட்டி) ஞாபகப்படுத்துகிறாள். நான் பிறந்த பிறகு பார்த்த ஒரே ஆச்சி- மூக்கம்மாள் ஆச்சி. அப்பா வழி பாட்டி மற்றும் தாத்தா கல்யாணத்திற்கு முன்பே கிடையாது. தாத்தா வின் ஒரே ஒரு போட்டோ பல குழந்தைகள் சூழ ஒரு பெஞ்சியில் அமர்ந்து எடுத்த போட்டோ.கிளாசிக். அதை தவிர அந்த தலைமுறையை எடுத்து சொல்ல வேறு எதுவும் பாதுகாக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. படிக்க கேட்க கேட்க இனிமையாக இருக்கும் இந்த நூல்
ஆச்சி - Aatchi
- Brand: கவியரசு கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹100
-
₹85
Tags: aatchi, ஆச்சி, -, Aatchi, கவியரசு கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்