காதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா? பெரும் அன்போடும் ஆரவாரத்தோடும் தொடங்கும் இல்லறம் சில நாட்களிலேயே ஏன் சலித்துப்போகிறது? ஊடலும் கூடலும் மாறி மாறித்தான் நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துகின்றன. ஆனால், ‘இன்பமும் துன்பமும் இணைந்த கலவைதான் வாழ்க்கை’ என்கிற புரிதல் எத்தனை பேருக்கு இருக்கிறது? பல வருடப் பாசமும் காதலும் நொடியில் உதிர்க்கும் ஒற்றை வார்த்தையில் உடைந்துபோகும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சரியான புரிதலும், சரிவிகித அன்பும் இருக்கும் இடத்தில் நிச்சயம் காதலும் நிலைத்திருக்கும். அதற்கான வழிகாட்டுதலை மிக மென்மையான நடையில் இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார் கிருஷ்ணா டாவின்ஸி. பிரபலமானவர்களின் மேற்கோள்களுடனும், தான் சந்தித்தவர்களின் அனுபவங்களுடனும் கிருஷ்ணா டாவின்ஸி ரொமான்ஸ் ரகசியங்களை எழுதி இருக்கும் விதம் அலாதியானது. ஓவியர் மணியம் செல்வனின் அழகிய ஓவியங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அவள் விகடனில் தொடராக வந்தபோதே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படைப்பு இப்போது நூல் வடிவில்! இதில், பக்கத்துக்குப் பக்கம் நிரம்பி இருக்கும் ரொமான்ஸ் நுணுக்கங்கள் நெஞ்சுக்குள் மாமழையாகப் பொழிந்து உங்களை வசப்படுத்தும் என்பது நிச்சயம்!
ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!
- Brand: கிருஷ்ணா டாவின்ஸி
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹75
-
₹64
Tags: aathalinal, romance, seyveer, ஆதலினால், ரொமான்ஸ், செய்வீர்!, கிருஷ்ணா டாவின்ஸி, விகடன், பிரசுரம்