ஈழத்தின் புதிய தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவரான ஃபஹீமாஜஹானின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல். இந்தக் கவிதைகள் பெண் என்ற உயிரியல் அம்சத்தில் ஊன்றி நின்று ஆணாதிக்கச் சமூகச் சூழலை எதிர்த்து மீறி மானுடப் பெருவெளியில் விரியும் வேட்கைகொண்டவை. ஒடுக்குமுறைக்கும் போர்க் கொடுமைகளுக்கும் இன அடக்குமுறைக்கும் மதக் கட்டுப்பாட்டுக்கும் எதிரானவை. சமத்துவமான அன்பையும் பாசத்தையும் காதலையும் வேண்டுபவை. 'நம் எதிரே வீழ்ந்து கிடக்கும் காலத்தின் பிறிதொரு முகத்தை' அடையாளம் காட்டுபவை.
விழிப்படைந்த பெண்மையின் குரலாகவும் அதிகாரத்துக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான குரலாகவும் அன்பு, பாசம், சமத்துவமான காதல் என்பவற்றின் குரலாகவும் இயற்கையின் குரலாகவும் அமையும் ஃபஹீமாவின் கவிதைகள் எளிமையானவை, நேரடியானவை, படிமச் செறிவு மிக்கவை.
Aathith Thuyar
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: Aathith Thuyar, 100, காலச்சுவடு, பதிப்பகம்,