உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அரவணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் ஆத்மாவின் அடையாளங்கள். சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்தெறிந்து, உயிர்களின் உன்னதத்தை மனித உணர்வுகளுக்கு எடுத்துச் சொல்லும் சிறந்த ஆன்மிகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ். ‘சோதனை’ என்ற வார்த்தையின் கொம்பை உடைத்துப் பாருங்கள்... ‘சாதனை’ பிறந்திடும். வாழ்க்கையின் பலவித வேதனைச் சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனித உயிர்களுக்கு, தன் சொந்த அனுபவத்தின் மூலம் தகுந்த ஆறுதல் அளித்து நல்வழி காட்டியிருக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். மேலும், தன் வாழ்வில் நடைபெற்ற ருசிகரமான சம்பவங்களையும், உலக உயிர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கான வழிமுறைகளையும் விளக்கியுள்ளார். மக்களை அன்பின் பாதையில் வழிநடத்திச் செல்லும் ரகசியத்தை தெளிவுபடக் கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பு. சத்குருவின் அனுபவங்கள், ‘ஆயிரம் ஜன்னல்’ என்ற தலைப்பில், எழுத்தாளர்கள் ‘சுபா’வின் எழுத்தோவியங்களாக ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் தொடராக மலர்ந்து, பலரின் வாழ்க்கை வாசலைத் திறந்து வைத்திருக்கிறது. அமைதியின் உருவமாகவும், ஆற்றலின் அருவமாகவும் திகழும் சத்குருவின் பாதையில்...தன்னையே தனக்குள் தேடுபவர்களுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டியாக அமைவது நிச்சயம்.
ஆயிரம் ஜன்னல்
- Brand: சத்குரு ஜக்கி வாசுதேவ்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹175
-
₹149
Tags: aayiram, jannal, ஆயிரம், ஜன்னல், சத்குரு ஜக்கி வாசுதேவ், விகடன், பிரசுரம்