பேராசிரியர் ம.பெ.சீ. தமிழ் வாசிப்புலகமும் வைணவவுலகமும் நன்கறிந்த ஒரு பெயர். ஆழ்வார்கள், ‘தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளை’ நெஞ்சில் சூடியவர் அவர். முதலாழ்வார் மூவர், குலசேகராழ்வார், பெரியாழ்வார் ஆகிய அவரது நூல்கள் பெரிதும் கொண்டாடப் பெற்றவை.
மரபுத் தமிழ் இலக்கியம் வேரும் விழுதுமாகக் கிளை பரப்பி நிற்கும் ஒரு பேரால மரமாகும். விழுதுகளான இலக்கிய வகைமைகள் குறித்துப் பேராசிரியர் ம.பெ.சீ. முன்னரே ‘வைணவ இலக்கிய வகைமைகள்’ என்றொரு நூலும், ‘திருமங்கையாழ்வார் மடல்கள்’ குறித்த ஒரு நூலும் எழுதியுள்ளார். ‘ஆழ்வார்களும் தமிழ் மரபும்’ என்னும் இந்நூல் கண்ணுக்குப் புலப்படாத மரபு வேர்களை இனங்காட்டும் முயற்சியில் எழுந்ததாகும்.
தமிழ் இலக்கணிகளும் இலக்கியவாணர்களும் மரபுகுறித்துப் பெருநாட்டம் கொண்டவர்களே. ‘மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்’ என்பது தொல்காப்பியர் தந்த எச்சரிக்கைக் குரலாகும். மரபு அழிப்பு ஒருபுறமாகவும் அதற்கான எதிர்ப்பு ஒருபுறமாகவும் உலகம் இயங்கி வரும் காலம் இது. காலத்தின் தேவையாக இந்நூலை நான் கருதுகிறேன்.
ஆழ்வார்கள் தமிழ் மரபில் கொண்டிருந்த ‘ஊற்றம்’ எத்தகையது என்பதை விளக்கிப் பேசும் இந்நூல் மறைந்துவரும் ரசனைக் கோட்பாட்டுக்குப் புத்துயிர் தருவது.
– பேராசிரியர் தொ.பரமசிவன்
Aazhvargalum Thamizh Marabum /ஆழ்வார்களும் தமிழ் மரபும்
- Brand: M.P.Srinivasan /ம.பெ.சீனிவாசன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹160
Tags: , M.P.Srinivasan /ம.பெ.சீனிவாசன், Aazhvargalum, Thamizh, Marabum, /ஆழ்வார்களும், தமிழ், மரபும்