ஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுகூரப்படும், தொடர்ந்து கொண்டாடப்படும் தலைவராக இன்று வரை நீடிக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை வரலாறு.விறகு வெட்டி. படகோட்டி. பலசரக்குக்கடை ஊழியர். வக்கீல். அமெரிக்க ஜனாதிபதி. உலகத் தலைவர். குறைந்தது ஆயிரம் தடைகளைத் தாண்டித்தான் தன் வாழ்வின் ஒவ்வொரு முக்கியக் காலகட்டத்தையும் கடந்து முன்னேறியிருக்கிறார் ஆபிரஹாம் லிங்கன்.கொஞ்சம் தேங்கியிருந்தாலும் ஒரு தொடர் தோல்வியாளராக மாறியிருக்கவேண்டியவர். திருமண வாழ்வில் தோல்வி. சட்டமன்றத் தேர்தலில் தோல்வி. அத்தனையும் கடந்து ஐம்பது வயதில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறு விநாடியே, அமெரிக்காவை உலுக்கியெடுத்த உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. தலைக்கு மேலே கத்தி.லிங்கனிடம் தீராத வேட்கையும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் மகத்தான கனவுகளும் இருந்தது. கறுப்பின மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவேண்டும். மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு நடத்தப்படும் அரசாங்கத்தை சிருஷ்டிக்கவேண்டும். அமெரிக்கா துண்டுதுண்டாகச் சிதறாமல் ஒரு வலிமையான தேசமாக உருப்பெறவேண்டும்.லிங்கனின் எளிமையான வாழ்க்கையும், அவர் வெற்றிகொண்ட கடினமான தருணங்களும் சரித்திரத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிட்ட முக்கிய அத்தியாயங்களாகும்.சரித்திரத்தை மாற்றி எழுதிய ஆபிரஹாம் லிங்கனின் அசாதாரணமான வாழ்க்கையை எளிய, இனிய நடையில் விவரிக்கிறார் பாலு சத்யா.
ஆபிரஹாம் லிங்கன் : அடிமைகளின் சூரியன்-Abraham Lincoln
- Brand: பாலு சத்யா
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹150
Tags: , பாலு சத்யா, ஆபிரஹாம், லிங்கன், :, அடிமைகளின், சூரியன்-Abraham, Lincoln