• ஐந்து செல்வங்கள்  - Ainthu Selvangal
செல்வம் இரு வகைப்படும். அவை முறையே கல்விச் செல்வம், பொருட் செல்வம் எனப்படும்” என அறிந்திருக்றோம். ஆனால், இன்று ஒரு புதிய செல்வத்தைப்பற்றி ஆராய்வோம். * செல்வம் பலவகைப்படும். அவை முறையே மனை, மனைவி, மக்கள், தாய், நெல், நீர், நிலம், கால்நடை, கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன். பொருள், போகம் எனப் பதினாறு வகைப்படும் எனக் கூறலாம். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்' எனப் பெரியோர்கள் வாழ்த்தக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவது என்பதல்ல என்றும், மேற்கண்ட பதினாறு செல்வங்களைப் பெறுவதே என்றும், நமக்கு'நன்கு விளங்குகின்றது. ஆம்! அவை அனைத்தும் ஒவ்வொரு மனிதனும் பெற. வேண்டிய பெரும் பேறுகளாகிய செல்வங்களேயாம். இச்செல்வங்களில் எது ஒன்று குறையினும், நமது வாழ்வு சிறக்காது என்று நன்கு தெரிகிறது. - இப்பதினாறு செல்வங்களுள் தாயும் ஒரு செல்வமாகும் தாயைப் பலர் தெரிந்திருப்பர். ஆனால், தாயார்? தாய் +யார்? என அறிந்திருப்பவர் மிகச் சிலரே எனத் துணிந்து கூறலாம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஐந்து செல்வங்கள் - Ainthu Selvangal

  • ₹25


Tags: ainthu, selvangal, ஐந்து, செல்வங்கள், , -, Ainthu, Selvangal, கி.ஆ.பெ. விசுவநாதம், சீதை, பதிப்பகம்