வெட்டப்பட்ட ஆட்டின் உடல் துடித்ததே என் மனக்கண்ணில் மிதந்தது. மனிதன் சுயநலத்திற்காக வாய் பேச முடியாது, மனிதனுக்கு எவ்வழியிலும் தீங்கு செய்யாத, மனிதனை நம்பியே வாழ்கிற இந்த ஆட்டை வெட்டலாமா? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? தன்னோடு அண்டி வாழ்கிற கோழி, ஆடு, மாடு, பன்றி, ஒட்டகம் முதலிய விலங்குகளை மட்டுமே கடவுள் நம்பிக்கையில் பலி கொடுத்துத் தெய்வங்களைக் ‘கும்பிடும்’ இந்த நம்பிக்கை எவ்வாறு வந்தது? விலங்கு, பறவை என்பவையும் மனிதனைப்போல் உயிரினங்கள்தான். அவற்றைத் தன்வசப்படுத்தி மனிதன் என்ற சக்தியாக இருப்பவன் அதனை அழிப்பது சரியா?
உயிரைக் கொல்வது, பலி கொடுப்பது சரியா என்பது பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்கத் தெரியாத ஒரு சிறுவன், அவனுக்காக நேர்த்தி செய்யப்பட்ட ஓர் ஆட்டோ கொண்ட நட்பு, அது பற்றிய அவனுடைய எண்ணங்களே இந்நாவலாக விரிந்துள்ளது.
ஐயனார் ஆடு - Aiyanaar Aadu
- Brand: மாத்தளை சோமு
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹220
Tags: aiyanaar, aadu, ஐயனார், ஆடு, -, , Aiyanaar, Aadu, மாத்தளை சோமு, டிஸ்கவரி, புக், பேலஸ்