வாழ்க்கையை நடத்திச்செல்ல, நம்மிடம் இருக்கும் ஒரே கருவி எண்ணம் மட்டும் என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், பன்னெடுங்காலமாய் கருதப்படுகிறது. உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட அக்கருத்தை, முற்றிலுமாக தகர்த்தெறிகிறார் கிருஷ்ணமூர்த்தி. தனி நபருக்குள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே, பெருங்குழப்பத்தை எண்ணம் விளைவிக்கிறது என்று அவர் எடுத்துரைக்கிறார். வாழ்வின் வளங்களைப் பெறுவதில், எண்ணம் மனிதனுக்குப் பெருமளவில் உதவுகிறது என்பதில் சந்தேகமேதும் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் எண்ணத்திற்கு உரிய இடம் உள்ளது. ஆனால், உளவியல் பிரச்சனைகளுக்கு எண்ணம் பெற்றுத்தரும் தீர்வுகள், பிரச்சினைகளை மேலும் பன்மடங்காக்குகிறது.
Tags: நர்மதா பதிப்பகம், அளவீடற்ற, மனம், ஜே. கிருஷ்ணமூர்த்தி, நர்மதா, பதிப்பகம்