8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்
ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்ற பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவுகளின் சக்திக்கும் நம்முடைய இதயம் சொல்லுவதைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்திற்குமான ஒரு நிரந்தரச் சான்றாகும்.
The Alchemist
- Brand: Paulo Coelho (Author) Nagalakshmi Shanmugam (Translator)
- Product Code: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
- Availability: In Stock
-
₹399
Tags: alchemist, The, Alchemist, Paulo Coelho (Author) Nagalakshmi Shanmugam (Translator), மஞ்சுள், பப்ளிசிங், ஹவுஸ்