புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாக பிறந்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணினார். தன்னுடைய கொள்கைகளை ஒரு சாதாரண மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையை மீறியவராக ஒருபோதும் சித்தரித்துக் கொண்டதில்லை. தனக்கு இயற்கையை மீறும் ஆற்றல் இருப்பதாகவும் அவர் சொன்னதில்லை. தன்னிடம் இயற்கையை மீறிய ஆற்றல் இருப்பதாக நிரூபிக்க, அவர் அதிசயங்கள் எதையும் நிகழ்த்தியதுமில்லை. புத்தர், மார்க்கப் பாதைக்கும் மோட்சப்பாதைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்கினர். ஏசு, முகம்மது மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் தங்களை மோட்சத்திற்கான வழிகாட்டிகளாகச் சித்தரித்துக் கொண்டனர். புத்தர் தன்னை மார்க்கத்திற்கான வழிகாட்டியாக சித்தரித்துக் கொள்வதிலேயே நிறைவடைந்தார்.
அம்பேத்கரின் ஆசான் புத்தர்
- Brand: ஏபி. வள்ளிநாயகம்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹150
Tags: ambedkarin, aasan, buddhar, அம்பேத்கரின், ஆசான், புத்தர், ஏபி. வள்ளிநாயகம், எதிர், வெளியீடு,