ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத்தில் திளைக்க வைக்கிறது. வாழ்க்கையில் தேடுதல் ஓர் அம்சம் என்றில்லாமல் தேடுதலே வாழ்க்கை என்றாகிறது.
Tags: american, அமெரிக்கன்-American, சா. தேவதாஸ், வம்சி, பதிப்பகம்