• சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்-Sirudaniya Snacks & Sweets
பாக்கெட் உணவுகளோ, கடைகளில் விற்கும் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ் அயிட்டங்களோ எல்லாமே குழந்தைகள், பெரியவர்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பதாகத்தான் உள்ளன. நாமே நமது சமையலறையில் சமைப்பது ஒன்றுதான் பாதுகாப்பானது. அதிலும் இப்போது மக்களுக்கு சிறுதானிய உணவுகளின் மேல் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சிறு தானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. சிறு தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, கொழுப்பு சத்து குறைகிறது, உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதிலும் குழந்தைகள் உணவில் சிறுதானியங்கள் சேர்ப்பது நல்லது என்பது மட்டு-மல்ல மிகவும் முக்கியமும்கூட என்று பரிந்துரைக்கிறார்கள். அப்படியானால் குழந்தைகளுக்கு இந்த சிறு தானியங்களை அவர்கள் முகம் சுளிக்காமல் ருசிக்கும்படிச் செய்ய ஒரே வழி அவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஸ்நாக்ஸ், ஸ்வீட்ஸ் அயிட்டங்களிலிருந்தே தொடங்குவதுதான். சரி, ஆனால் எப்படிச் சமைப்பது? சமையல் நிபுணர் தீபா சேகரின் 100 சமையல் குறிப்புகள் கொண்ட இந்தப் புத்தகம் உங்கள் கரம் பிடித்து உதவுகிறது. இது உங்கள் கையிலிருந்தால் சிறு தானிய சமையலின் எக்ஸ்பர்ட் நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள். இனி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கைகளில்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்-Sirudaniya Snacks & Sweets

  • ₹100


Tags: , தீபா சேகர், சிறுதானிய, ஸ்நாக்ஸ், &, ஸ்வீட்ஸ்-Sirudaniya, Snacks, &, Sweets