அன்றில்" என்ற சொல்லுக்கு ஒன்றை விட்டு மற்றொன்று பிரிந்திராது என்று பொருள்..
அன்றி + இல் = அன்றில்..இந்த இயல்பு கருதியே நம் முன்னோர்கள் ஒரு பறவைக்கு "அன்றில்" என்று பெயர் வைத்தனர்.. ஆண் அன்றிலும், பெண் அன்றிலும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்திராதாம்.. பிரிந்தும் வாழாதாம்..ஒரு வேளை பிரிய நேரிட்டால், உடனே கூவி அழைக்குமாம்.. இணைந்து வாழும் அன்றில் பறவைகளில் ஒன்று இறக்க நேர்ந்தால், மற்றொன்று தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்ளுமாம்.. தூங்கும்போது கூட ஒன்றன் மீது மற்றொன்றின் பார்வை வைத்தே உறங்குமாம்..
Tags: andril, அன்றில்-Andril, கௌரிஷங்கர், வம்சி, பதிப்பகம்