நாகூரின் பெருமைகளில் ஒன்று அஞ்சுகறி சோறு. இதென்ன அஞ்சுகறி சோறு என்று ஒருவர் கேட்டார். தலைப்பைப் படித்தவுடனேயே அவரது ஆர்வம் தூண்டப்பட்டுவிட்டது இயற்கைதான். பசி போக்கும் சோறு, அதுவும் ஐந்து வகைக் கறிகளுடன்! யாருக்குத்தான் ஆர்வம் வராது?! மனிதன் வாழ்வதே வயிற்றுக்காகத்தானே! இதில் அறிவாளி, அறிவிலி என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. மனிதர்களுக்கு சமத்துவம் தரும் ஒரே விஷயம் பசிதானே! ஆனால் இந்த அஞ்சுகறி சோறு வயிற்றுப் பசிக்கானதல்ல. அறிவுப்பசிக்கானது. ஆன்மிகப்பசிக்கானது. தினமணி டாட்.காமில் வெளிவந்தநாகூர் ரூமியின் வித்தியாசமான இக்கட்டுரைகள் உணவைப் பற்றியும் பேசும், நம் கனவைப் பற்றியும் பேசும். பிரியாணியின் பதம் பற்றியும் பேசும் தம்மபதம் பற்றியும் பேசும். கோமாதாவின் பால் பற்றியும் பேசும் காமத்துப்பால் பற்றியும் பேசும். சுவைத்துத்தான் பாருங்களேன்!
‘இக்கட்டுரைகள் தினமணி டாட் காமில் தொடராக வெளிவந்தவை’
Tags: anjukari, soru, அஞ்சுகறி, சோறு, நாகூர் ரூமி, வானவில், புத்தகாலயம்