தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் சோழ, பாண்டியர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் அளவிற்குச் சேர மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலவில்லை. காரணம் முறையான வரலாற்றுப்பதிவுகள் இல்லாமையே பிற்காலச் சேரமன்னர்கள் 25 பேர் என்று ஒரு குறிப்பு காணப்பட்டாலும் பட்டியல் அறியப்படாமலேயே உள்ளது.அவர்களுள் சைவம் தழுவியவனாகச் சேரமான் பெருமாள் நாயனாரும் வைணவம் தழுவிய குலசேகர ஆழ்வாரும் ஆகிய இருவரும் அவர்கள் பாடியனவாகக் கருதப்படும் பாடல்கள் வழியே அறியப்படுகின்றனர். அவர்களுன் சேரமான் பெருமாள் என்பவர் பிற்காலத்தில் அரேபியாவிற்குச் சென்று நபிகள் நாயகத்தின் சீடராகி வாழ்ந்து மறைந்தார். என்று இசுலாமிய நூல்களில் குறிப்புக்கள் உள்ளன. அந்த குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு 'அராபியச் சேரமான்' என்னும் இந்த வரலாற்று நாவல் பின்னப்பட்டுள்ளது.சரியான வரலாற்று ஆதாரங்கள் இல்லாதநிலையில் கற்பனைகள் அதிகமாகக் கலந்திருக்கலாம். அதன் சிறப்பினை நாவலைப் படித்துப் புரிந்துகொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.இந்த அற்புதமான நாவலை வரலாற்று நாவலாசிரியர் திரு. உதயணன் அவர்கள் பெரிதும் முயன்று படைத்துள்ளார். சமய உணர்வுகள் சிதைக்கப்படாமல் சிந்தனைக்கருக்களையே சீர்ப்படுத்தி நடைநலமும் உடைநலமும் பொருந்த தேவையான அளவு உணர்ச்சிகளைக் கலந்து படைத்துள்ளார். அவருடைய ஏனைய நாவல்களைப் போல இந்த நாவலும் விறுவிறுப்புடன் அமைந்துள்ளது.திரு உதயணன் அவர்களுடைய வரலாற்று நாவல் வரிசையில் இந் நாவலும் வெளிவந்துள்ளது. வாசக அன்பர்கள் படித்து பயன்படுவீர்கள் என்று நம்புகிறோம்.
அராபியச் சேரமான் - Arabiya Seraman
- Brand: உதயணன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹700
Tags: arabiya, seraman, அராபியச், சேரமான், , -, Arabiya, Seraman, உதயணன், சீதை, பதிப்பகம்