• அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்)-Aram Unmai Manithargalin Kathaigal
ஜெமோவை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்பம் உண்மையானதாக கூட இருக்கலாம். ஆனால், அதை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டது இந்த ’அறம்’. ஜெமோவின் அதிதீவிர எதிர்ப்பாளர்கள் கூட இதை கொண்டாடுவார்கள் என்றே நினைக்கிறேன். இங்கு எழுத்து என்று எழுதப்படும் அனைத்துமே எழுதுபவரின் கதையோ அவர் பார்த்து, கேட்டு அனுபவித்த கதைகளோ தான். புனைவுகளில் கூட அவர்களது வாழ்வின் அனுபவங்களும், உணர்வுகளும் வெளிப்பட்டுவிடும். தனது சொந்த வாழ்வினூடே தான் அந்த புனைவுலகம் கட்டமைக்கப்படும். மிகுந்த யோசனையோடு தான் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். 400 பக்கம் என்பது சற்று மலைப்பாகத்தான் இருந்தது, ’அறம்’ என்ற முதல் கதையின் இரண்டாம் பக்கத்தை தாண்டும்வரை. அதன்பின்னர், அந்த தொகுப்பை வாசிப்பது சுவாசத்தை போல இயல்பாய் நடந்துக்கொண்டேயிருந்தது. இதிலுள்ள ஒவ்வொரு கதை குறித்தும் ஒரு திறனாய்வு கட்டுரை வடிக்கலாம். ஒரு கதை என்பது அது நடந்த காலத்தை பிரதிபலிக்க வேண்டும். இன்னும் நூறு வருடம் கடந்து வாசிப்பவர்க்கும் அந்த காலக்கட்டம் எப்படி இருந்தது என்பதற்கு ஒரு சிறந்த குறிப்பாக அமைய வேண்டும். அந்த வகையில் இந்த தொகுப்பு ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். இதிலிருக்கும் ஒவ்வொரு கதையும் குறிப்பிட்ட காலகட்டத்தையும், மனித மனங்களையும் தெளிவாக உணர்த்தும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்)-Aram Unmai Manithargalin Kathaigal

  • ₹400


Tags: aram, unmai, manithargalin, kathaigal, அறம், (உண்மை, மனிதர்களின், கதைகள்)-Aram, Unmai, Manithargalin, Kathaigal, ஜெயமோகன், வம்சி, பதிப்பகம்