எவனொருவன் பிறருடைய கடனுக்காகக் கூட்டுக் கையெழுத்துப் போடத் தொடங்குகிறானோ, அவன் அன்றையிலிருந்தே தன்னையும் அழித்துக் கொள்ளத் தொடங்கிவிடுகிறான். கூட்டுக்கையெழுத்துப் போட்டுப் பிறருக்கு உதவி செய்ய விரும்புவதைவிட, தன் கையில் இருக்கும் பணத்தை அவருக்கு நன்கொடையாகக் கொடுத்து விடுவது எவ்வளவோ மேலானது. -
பிறர் எண்ணங்களை அறிந்து, அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது. ஆனால், உன் எண்ணங்களை அறிந்து, நீ யார் என்பதைக் கண்டுபிடிப்பதோ, மிகவும் எளிது.
ஒரு கழகத்திற்குப் பொருளைத் தேடிக்கொடுக்க இயலாதவர் கள், இருப்பதையேனும் அழிக்காதிருப்பது நல்லது. ஒரு நிலையத் திற்குச் சிறப்பைத் தேடித்தர இயலாதவர்கள். பழிப்பையேனும் தேடித் தராதிருப்பது நல்லது.
அறிவுக்கு உணவு மாணவர்களுக்கு - Arivukku Unavu Manavargaluku
- Brand: கி.ஆ.பெ. விசுவநாதம்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: arivukku, unavu, manavargaluku, அறிவுக்கு, உணவு, மாணவர்களுக்கு, , -, Arivukku, Unavu, Manavargaluku, கி.ஆ.பெ. விசுவநாதம், சீதை, பதிப்பகம்