சுதந்தர இந்தியா இதுவரை காணாத ஓர் எழுச்சியை அண்ணா ஹசாரே ஏற்படுத்தியிருக்கிறார். படித்த, படிக்காத, நடுத்தர, மேல்தட்டு இளைஞர்களின் பெரும் படை இன்று அண்ணாவுக்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது. ஊழலுக்கு எதிராக அவர் முன்வைக்கும் ஜன் லோக்பால் மசோதா, கறை படிந்துள்ள அரசியல் களத்தைச் சுத்தப்படுத்திவிடும் என்று நம்மில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். மொத்தத்தில், இரண்டாவது காந்தியாகவும் இந்தியாவின் விடிவெள்ளியாகவும் ஊடகங்களால் அண்ணா ஹசாரே இன்று முன்னிறுத்தப்படுகிறார்.உண்மை நிலவரம் என்ன? லோக்பால் மசோதா ஊழலை ஒழித்துவிடுமா? நம் அரசியல்வாதிகள் இந்த ஒரு சட்டத்தால் திருந்திவிடுவார்களா? லஞ்சம் முழுமுற்றாக ஒழிக்கப்பட்டுவிடுமா? ஜன் லோக்பால் மசோதா என்பது அண்ணா ஹசாரேவின் கண்டுபிடிப்பா? ஓர் உதாரணப் புருஷராக, போராளியாக, தேசத்தை வழிநடத்தக்கூடிய ஒரு சக்தியாக அண்ணா ஹசாரேவை ஏற்கமுடியுமா?ஆரவாரங்களையும் அதீத நம்பிக்கைகளையும் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு அண்ணா ஹசாரேவின் வாழ்வையும் அவரது போராட்டத்தையும் அணுகும்போது, முற்றிலும் எதிர்மறையான சித்திரமே காணக்கிடைக்கிறது. சந்திரமௌளீஸ்வரனின் இந்தப் புத்தகம் அண்ணா ஹசாரேவின் அறியப்படாத இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு லோக்பால் சட்ட மசோதா பற்றிய ஓர் அடிப்படை அறிமுகத்தையும் அளிக்கிறது.
அறியப்படாத அண்ணா ஹசாரே-Ariyappadaatha Anna Hazare
- Brand: V. சந்திரமௌலீஸ்வரன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹75
Tags: , V. சந்திரமௌலீஸ்வரன், அறியப்படாத, அண்ணா, ஹசாரே-Ariyappadaatha, Anna, Hazare