இந்த காலத்து அர்ஜுனர்கள் திரோனர்களுக்கே பாடம் சொல்லித் தருபவர்களாக இருக்கிறார்கள். அதனால்த்தான் மில்டன் போன்றதொரு கடமை தவராத காவல் அதிகாரி தன் பதவி காலத்தில் செய்ய முடியாததை அவரை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கும் அர்ஜுனால் சின்ன வயதிலேயே செய்ய முடிகிறது.இந்த காலத்து மதுமிதாக்களும் முன்போல் இனிமையாக பேசுவதைத் தவிர வேறு எதுவுமே தெரியாத வெகுளிகளாக, அழகுப் பதுமைகளாக இல்லை. அவர்கள் அர்ஜுன்களுக்கு இணையாக சிந்திக்கிறார்கள். பல நேரங்களில் அவர்களைவிட கூர்மையான முடிவுகளை எடுக்கிறார்கள். இந்த ஆற்றலை இவர்களுக்குள் புகுத்தியவர் யார்?
வேறு யாரும் இல்லை. சதா சர்வ நேரமும் வெகுஜனத்தின் போக்கை கவனித்துக்கொண்டே இருக்கும் பிகேபி போன்ற எழுத்தாளர்கள்தான். பட்டுக் கோட்டை பிரபாகரின் ‘அர்ஜுனன் அம்பு’ குமுதம் சிநேகிதியில் தொடராக வெளிவந்தபோதே பல இதயங்களைத் தைத்தது. இப்போது புத்தக வடிவில் உங்களை நோக்கி.
அர்ஜுனன் அம்பு
- Brand: பட்டுக்கோட்டை பிரபாகர்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹106
Tags: arjunan, ambu, அர்ஜுனன், அம்பு, பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில், புத்தகாலயம்