• அர்த்தமுள்ள அந்தரங்கம்
சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு. இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை. டிஎன்ஏ என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான். இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள். அவை, உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம். காமமா! என அதிர்ச்சியடைந்தாலும், ஆமாம்! என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது. ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது. ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன. பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் அர்த்தமுள்ள அந்தரங்கம் என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர் ஷாலினி. இந்தப் புத்தகத்தில் மனித இனத்தின் அந்தரங்கம் குறித்த ஆச்சரியமூட்டும் உண்மைகளும், அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களும் நிரம்ப உள்ளன. காமத்தின் ஆதாரக் குணங்களோடு மனித இனத்தின் அந்தரங்கப் பிரச்னைகளை, உளநலவியல் பூர்வமாக அணுகி இருக்கிறார் நூலாசிரியர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அர்த்தமுள்ள அந்தரங்கம்

  • ₹200
  • ₹170


Tags: arthamulla, antharangham, அர்த்தமுள்ள, அந்தரங்கம், டாக்டர். ஷாலினி, விகடன், பிரசுரம்