கதவு தட்டினால்தான் திறக்கும். பேசாமல் நின்றிருந்தால் எதுவும் நிகழாது. அப்படிதான் கடவுளும். கடவுளிடம் மனமுருக வேண்டிக் கேட்டால் மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. வேண்டுதல் வெறுமனே நிறைவேறாது, அதற்கான கடமைகளைச் செய்து பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை முறைகளில் ஹோமங்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அத்தகைய சிறப்பு மிகுந்த ஹோமங்களைப் பற்றி சக்தி விகடன் இதழில் சுப்ரமணிய சாஸ்திரிகள் எளிமையாக சிறப்புடன் தொடராக எழுதினார். அதில், எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படும் கணபதி ஹோமம், நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேற சுதர்ஸன ஹோமம், நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்க செய்யப்படும் நவக்கிரக ஹோமம்... இப்படி குடும்பத்தில் ஐஸ்வர்யம் பொங்க பல ஹோமங்கள் பற்றி விளக்கியுள்ளார். மேலும், லட்சுமி குபேர ஹோமம், சரஸ்வதி ஹோமம், சண்டி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், தன்வந்திரி ஹோமம், தில ஹோமம், ஆவஹந்தி ஹோமம், மகா மிருத்யுஞ்ஜய ஹோமம், வாஸ்து ஹோமம், புருஷ ஸுக்த ஹோமம், ஸ்ரீஸுக்த ஹோமம், பகவத்கீதா ஹோமம், சுயம்வரா பார்வதி பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், ஐக்கிய மத்ய ஹோமம், வித்யாவிஜய ஹோமம், ரிண மோசன ஹோமம் முதலான ஹோமங்களைச் செய்தால் சிறப்புடன் வாழலாம் என்று அற்புதமாக சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டினார். அவை தொகுக்கப்பட்டு அர்த்தமுள்ள ஹோமங்கள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. ஹோமங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் நம் வீட்டில் ஹோமம் செய்யும்போது சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனித்து மிகுந்த பலனைப் பெறலாம். அதற்கு இந்தப் புத்தகம் சிறந்த கையேடாக இருக்கும்.
அர்த்தமுள்ள ஹோமங்கள்
- Brand: சுப்ரமணிய சாஸ்திரிகள்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹150
-
₹128
Tags: arthamulla, homangal, அர்த்தமுள்ள, ஹோமங்கள், சுப்ரமணிய சாஸ்திரிகள், விகடன், பிரசுரம்