ஆர். ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘குறுநாவல்’ என்னும் வரையறைக்குள் அடங்குபவை. அவற்றுள் ‘அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு. பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘அறுவடை’யை எழுதினார். புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று. வட்டார மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது. அவரது எழுத்துக்களில் துலங்கும் ‘பெண் நோக்கு’ இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்துக்குள்ளிருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது. இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும்.R. Shanmugasundaram has written over twenty novels, many of which can be categorised as novellas. Aruvadai, or Harvest, holds an important place among them. After a decade long hiatus, Shanmugasundaram started writing again, thanks to writer Ka.Na.Su’s incessant pressure – the result of which is this book. It combines the inspiration and freshness of a new writer. The way in which the inner struggles of the characters are depicted, and having a woman’s perspective makes the novel relevant and captivating even today. Coming back to light after years, this under-appreciated is sure to make waves.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Aruvadai

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹90


Tags: Aruvadai, 90, காலச்சுவடு, பதிப்பகம்,