• Aryabatarin Kanidham /ஆர்யபடரின் கணிதம்
பண்டைய இந்தியாவின் பங்களிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் வானியல், கணிதம் உள்ளிட்ட துறைகளின் வரலாற்றைக் கட்டமைக்கமுடியாது. இன்றும் நம்மை வியப்பிலாழ்த்தும் அசாத்தியமான பாய்ச்சல்களைப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலர் நிகழ்த்தி இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர், ஆர்யபடர். ஆர்யபடரின் கணிதப் படைப்புகள் (ஆர்யபடீயம்) திருக்குறள்போல் ஈரடிப் பாக்களால் கட்டமைக்கப்பட்டவை என்பதால் அவற்றை வாசிப்பதும் புரிந்துகொள்வதும் கடினம். உரைகளை நாடலாம் என்றால் அவையும் பழங்காலத்தவையே. எனில், கணிதத்தில் ஆர்வமுள்ள இன்றைய தலைமுறையினரால் ஆர்யபடரை நெருங்கவேமுடியாதா? முடியும். பத்ரி சேஷாத்ரியின் இந்நூல் ஆர்யபடரின் கணிதத்தை நமக்குப் புரியும் மொழியில், இன்றைய தேவைகளுக்கு ஏற்றாற்போல் எளிமையாக, படிப்படியாக அறிமுகப்படுத்துகிறது. ஐந்தாம் நூற்றாண்டு சூத்திரங்களையும் நவீன கணிதச் சமன்பாடுகளையும் அழகாக ஒன்றிணைக்கிறார் பத்ரி. எண்களோடு விளையாட விரும்பும் அனைவருக்கும் இந்நூல் ஒரு பெரிய களத்தை அமைத்துக்கொடுக்கிறது. மாணவர்கள் தொடங்கி கணித ஆர்வலர்கள் வரை அனைவரும் இதிலிருந்து பயன் பெறலாம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Aryabatarin Kanidham /ஆர்யபடரின் கணிதம்

  • ₹110


Tags: , Badri Seshadri /பத்ரி சேஷாத்ரி, Aryabatarin, Kanidham, /ஆர்யபடரின், கணிதம்