சரித்திர நாயகனான அவுரங்கசீப், ஷாஜகானுடனும், தாராவுடனும், ஜஹனாராவுடனும், இறுதியில் தன் மனசாட்சியுடனும் போராடும் காட்சிகளை, நாடக வடிவில் அமைத்துள்ளார் நூலாசிரியர். சந்தர்ப்பவாதிகளுக்கு மதம் அல்லது கொள்கை ஒரு சவுகரியமான கோஷம் என்னும் நூலாசிரியரின் இந்நூலில் மற்றொரு பகுதியாக இந்நூலில் நந்தன் கதையும் நாடகமாக இடம் பெற்றுள்ளது. கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியுள்ள, நந்தனார் சரித்திரத்தை ஒட்டி எழுதப்பட்ட இந்நாடகத்தில், பாரதியாரின் பாடலடிகளும் கையாளப்பட்டுள்ளன. கையிலே இருப்பது கள்ளு, வாயிலே ஒலிப்பது பள்ளு, காலிலே எடுப்பது துள்ளு, சாமியே இதுவென சொல்லு போன்ற இடை இடையே வரும் பாடல்கள், யதார்த்தமான நாடக அமைப்புக்குச் சிறப்பு சேர்த்துள்ளன. -பின்னலூரான். - தினமலர், 6/10/2013.
ஔரங்கசீப்-Aurangazeb
- Brand: இந்திரா பார்த்தசாரதி
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹125
Tags: aurangazeb, ஔரங்கசீப்-Aurangazeb, இந்திரா பார்த்தசாரதி, கவிதா, வெளியீடு