ஏன் அதைத் தந்தார் என்னிடம் அந்த சித்தப்பா என்று தெரியவில்லை. தனக்குப் பிடித்த பகிரக்கூடிய ஒன்றை தனக்குப் பிடித்தவருக்கும் தருவோமே அப்படியிருக்கலாம். ஆனாலும் அது என் அப்போதைய வயதிற்கு மீறிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. மேல்நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ராஜவேலு சித்தப்பா ஏழாம் வகுப்பிற்குள் நுழையும் என்னிடம் அதைத் தந்தார். முத்தையன் சித்தப்பா வாராவாரம் வாங்கிவரும் குமுதத்தில் சுஜாதா எழுதி வந்த ‘விக்ரம்’ யாரோ ஒரு எழுத்தாளர் எழுதிய ‘ஆவி ராஜ்யம்’ தொடர்கள் படித்துவிட்டு அக்காவிடமும் வருவோர் போவோரிடமும் நான் விவாதிப்பது கண்ட ராஜவேலு சித்தப்பா அதைத் தந்து ‘இதப் படிச்சு பார்றா!’ என்று சொல்லியிருக்கலாம். ‘மடி மீது விளையாடி’ என்ற மா. அன்பழகன் எழுதிய அது அந்த வயதிற்கு பெருந்தடிமனான ஒரு நூல்.
அயலகத் தமிழ் இலக்கியம் - மடி மீது விளையாடி - நாவல் - Ayalaga Tamil Ilakiyam Madi Meethu Vilaiyadi Novel