இந்த நாவல் நாதன் என்ற புரட்சியாளன் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார் . தோட்டக் காட்டில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக முயற்சியில் அவர் பெரும் ஈடுபாட்டை காட்டுகிறார். அவர் மூலம் பலருக்கு சில உரிமைகள் கிடைக்கிறது. இன்னைக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி மண்ணுல நமக்காக நாமே பாடுபடுவதுதான் என்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதை தன்னுடைய உழைப்பிலும் செலுத்துகிறார்கள் ரேஷன் கடை வருகை , மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சஞ்சலங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன கம்யூனிஸ்டுகள் எப்படி அந்த காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்தார்கள் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார், இந்த நாவலில் செம்பணைக் காடுகளுக்குள் இருந்துகொண்டு செம்மரங்கள் மூலம் என்னை தயாரித்து வெளிக்கொணரப்படுகிறது என்பது ஒரு பகுதியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பாமாயில் இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது சாதாரண மக்களுக்காக ரேஷன் கடைகளில் இந்த பாமாயில் விற்கப்படுகிறது .
அயலகத் தமிழ் இலக்கியம் - வினோத மனிதன் - சிறுகதைத் தொகுப்பு - Ayalaga Tamil Ilakiyam Vinotha Manithan