இந்த நூலில் பல சாதனையாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். சாதனை என்றால் ஏதோ சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குக் கடலில் நீந்திட வேண்டும்; அல்லது இமயமலையில் ஏறிச் சாதனை படைத்திருக்க வேண்டும் என்றில்லை. விரலுக்கேற்ற வீக்கத்தைப் போல், அவரவர் வாய்ப்புக்கேற்ப, வசதிக்கேற்ப, அறிவுத்திறனுக்கேற்ப, ஆசைக்கேற்ப, வயது பாராமல் அவரவர் வட்டத்திற்குள் நின்று செய்த வெற்றிச் செயல்களைத்தான் எழுதியுள்ளேன்.
இதற்காக பெரும்பாலும் ‘பெரிய’ மனிதர்களைத் தேடிப் போகவில்லை. ஆனால், என்னால் எழுதப்பட்டவர்கள் எல்லோரும் எனக்குப் பெரிய மனிதர்கள்தாம். ஏனெனில் என்னால் முடியாதவைகளை உங்களால் இயலாதவைகளை அவர்கள் செய்திருப்பதால் அவர்கள் பெரியவர்களே; அவர்கள் சாதனையாளர்களே! அவர்களைத் தேடி நான் இந்தியாவிற்கோ, பிறநாடுகளுக்கோ போகவில்லை. அவர்கள் அனைவரும் உள்நாட்டில் தேடிக்கிடைத்த மாணிக்கப் பரல்கள்.
ஐம்பதிலும் வாழ்க்கை வரும் - Aymbathilum Vaazhkkai Varum
- Brand: புதுமைத்தேனீ மா.அன்பழகன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹200
Tags: aymbathilum, vaazhkkai, varum, ஐம்பதிலும், வாழ்க்கை, வரும், -, Aymbathilum, Vaazhkkai, Varum, புதுமைத்தேனீ மா.அன்பழகன், டிஸ்கவரி, புக், பேலஸ்