ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.நவீனகால தமிழ்ச் சிந்தனைகள்மீதும் செயல்பாடுகள்மீதும் மரபின் வேரிலிருந்து எழுந்துவந்து வினையாற்றிய அயோத்திதாசர் எனும் அரிய மூலிகைச்செடியை ஒத்த சிந்தனையாளர்கள் பற்றிய தனித்துவமான அவதானங்களை உரையாடல்களின்வழியே கண்டடைகிறது இத்தொகுப்பு. நவீன மனப்பாங்கால் கண்டறிய முடியாத கோணங்களை அவற்றின் மறைவிலிருந்து விலக்கி, விரிந்த பின்புலத்தில் வைத்துப் பேசிய அயோத்திதாசரை அவர் காலத்திலிருந்தும் சமகாலத்திலிருந்தும் மதிப்பிடுகிறது இத்தொகுப்பின் கட்டுரைகள்.அயோத்திதாசர் என்னும் முழுமையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு அவை உருவானவிதம், அவர் ஒன்றை புரிந்துகொண்ட & விளக்கியமுறை,அவற்றின் சமகாலப் பொருத்தம் ஆகியவற்றையும் கட்டுரைகளில் முன்வைக்கிறார் ஸ்டாலின். முதன்முறையாக இதுவரை அயோத்திதாசர் சார்ந்து பதிவுகளிலிருந்து கவனம்பெறாத தரவுகளைத் திரட்டி எழுதப்பட்டிருப்பதும் இத்தொகுப்பின் தனித்துவம்.Ayothithaasar was rediscovered nearly after a century. The book presents his thought on a research perspective revealing his nuances to us.Ayothithaasar was a thinker who reacted upon the modern tamil thought, with his roots on the tradition. He explained much of modernity in new perspectives by placing them in context. The articles of the book talk about him from the context of his time, and how he fits in ours.Stalin’s work is attempt to understand the complete ayothithaasar,and also his thought process, formation and their importance on present times. To add to its uniqueness the book presents views from works of ayothithaasar that weren’t discussed before.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Ayothithasar : Vazhum Poutham

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹225


Tags: Ayothithasar : Vazhum Poutham, 225, காலச்சுவடு, பதிப்பகம்,