பகத் சிங். இந்தியா கண்டெடுத்த லட்சிய வீரன். சமரசமற்ற போராளி. நெஞ்சுரம் நிறைந்த விடுதலை வீரன்.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்தர நெருப்பைப் பற்றவைக்கவேண்டும். அதுதான் பகத் சிங்கின் ஆகப்பெரிய லட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும், சுதந்தரம் தொட்டுவிடும் தூரம் என்று பரிபூரணமாக நம்பினார். அதை நோக்கியே தன்னுடைய போராட்டக் களங்களைக் கட்டமைத்துக்கொண்டார்.
காந்தியின் அகிம்சைப் போராட்டம் சுதந்தரப் போராட்டக் களத்தை விரிவுபடுத்தியது என்றால், பகத் சிங்கின் வீரமும் தியாகமும் பல இளைஞர்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்திய சுதந்தரப் போராட்டத்தின் துடிதுடிப்பான அத்தியாயங்களுள் ஒன்று, பகத் சிங்கின் வாழ்க்கை!
Tags: bhagad, singh, பகத், சிங், நாக. சொக்கன், Sixthsense, Publications