கண்ணுக்குத் தெரியாத கரன்சியைக் கணக்கு வழக்கில்லாமல் வைத்திருக்கும் கேமர், வங்கியாளர், அரசியல்வாதி, தீவிரவாதி ஆகியோரிடமிருந்து ஒரு சாமானியனாக நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாக்க நேரிட்டால்?
மிகவும் பிரபலமான If God was a Banker என்கிற நூலின் ஆசிரியராக அறிமுகமான வங்கியாளர் ரவி சுப்ரமணியனின் ஏழாவது புத்தகம் பிட்காயினை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட God is a Gamer என்கிற த்ரில்லர் நாவலாகும்.
ஹேக்கரே கடவுளாக இருக்கும் உலகில் பணம் என்பது ஒரு பொருட்டே இல்லை. போர்க்களத்திற்கு வெளியே வஞ்சத்தாலும், சூழ்ச்சியாலும் படுகொலைகள் என்ற பண்டைய கிரேக்க ஃபோனோய் கடவுளின் மறுவடிவாய் இவர்கள் இருக்கிறார்கள். அகம் ஒன்றாகவும், புறம் ஒன்றாகவும் வாழ்வதையே அறமாக வகுத்துக்கொண்டு வாழும் இவர்களுக்கு சுயத்திற்காக சமூகத்தை காவுகொடுப்பதன் பாவ புண்ணியங்கள் பற்றியெல்லாம் யோசிக்க நேரம் இருப்பதில்லை. அங்கு தியாகிகளே வில்லன்களாகவும், வேட்டையாடுபவர்களே இரையாகவும் ஆக்கப்படுகிறார்கள்.
வாஷிங்டன் காங்கிரஸிலிருந்து டெல்லியின் நிதி அமைச்சகம், கோவாவின் உல்லாசக் கடற்கரைகளிலிருந்து மும்பையிலிருக்கும் பெருங்குழுமங்களின் போர்ட்ரூம் என இந்நாவல் பரபரப்பரப்புடன் பயணித்து வாசகர்களை மெய்நிகர் கரன்சி என அறியப்படும் பிட்காயினின் மர்ம உலகுக்கு அழைத்துச் செல்கிறது. புத்தகத்தைக் கையிலெடுத்தால் வாசித்து முடிக்காமல் வாசகர்கள் கீழே வைக்கமாட்டார்கள் என்பது உறுதி!
பிட்காயின் பரமபதம்
- Brand: ரவி சுப்ரமணியன் தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹499
Tags: bitcoin, paramapatham, பிட்காயின், பரமபதம், ரவி சுப்ரமணியன்தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம், வானவில், புத்தகாலயம்