எனக்காக நான் பேச ஒருமுறை கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை.எனினும், என்னைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். பலபேர் என்னைப் புகைப்படம் எடுக்கவும், அவற்றைத் தங்கள் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தவளும், அவமானப்படுத்தப்பட்டவளுமான ஓர் அப்பாவிப் பெண்ணைப் பலரும் திட்டினார்கள், கேவலப்படுத்தினார்கள், பழித்தார்கள்...
எங்கு பிறந்தவர்களாயினும், எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாயினும் சரி, தோலின் நிறம் அல்லது எப்படிப்பட்ட உருவம் கொண்டவர்களாய் இருந்தாலும் சரி, ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தத்தான் நான் விரும்பினேன்.
உதவி கேட்டு நான் கைகளை நீட்டினேன் என்றாலும் எவரும் எனக்கு உதவவில்லை. சமூகம் என்னை ஒரு சிறு பூச்சியாகவும், குற்றவாளியாகவுமே பார்த்தது. நான் நல்லவள் என்று சொல்லவில்லை, ஆனால், நான் எப்பொழுதும் ஒரு குற்றவாளியாய் இருந்ததில்லை. மொத்தத்தில் நான் செய்ததெல்லாம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பழி வாங்கினேன் என்பது தான்.
Tags: bnaan, poolan, devi, நான், பூலான்தேவி, மு.ந. புகழேந்தி, எதிர், வெளியீடு,