அயோத்திதாசரின் ‘தமிழன்’, இரட்டைமலை சீனிவாசனின் ‘பறையன்’ ஆகிய இதழ்களைப் போலவே ‘பூலோகவியாஸன்’ இதழும் தலித் வரலாற்றியலில் முக்கியத்துவம் உடையது.தலித் முன்னோடிகளான எம்.சி. ராஜாவுக்கும் சுவாமி சகஜானந்தருக்கும் ஆசிரியராக விளங்கியவர் பூஞ்சோலை முத்துவீர நாவலர். சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கிய இவரின் ஆசிரியத்துவத்தில் வெளியான இதழ் ‘பூலோகவியாஸன்’. அன்றைய காலகட்டத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்டுச் செறிவாக இயங்கிவந்த தலித் குழுக்களையும் அவற்றின் கருத்தியல்களையும் பிரதிபலித்த விதத்தில் நவீன தலித் வரலாற்றியலின் ஒளிக்கீற்றாக அமைகிறது இத்தொகுப்பு.1903 முதல் 1917வரை வெளியான ‘பூலோகவியாஸ’னின் ஒரு பிரதிகூட இதுவரை கிடைத்திராத நிலையில் அவ்விதழின் 1909ஆம் வருடத் தொகுப்பைக் கண்டெடுத்து, அதன் உள்ளடக்கத்தைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார், ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை: தலித் இதழ்கள் (1869-1943)’ என்ற நூலை எழுதி, தலித் இதழியல் வரலாற்றை மீட்டுருவாக்கிய ஜெ. பாலசுப்பிரமணியம்.Pulokaviyaasan has an important place in Dalit history. It belongs to the canon of Tamil magazines, along with Ayothidasar’s Thamizan and Rettaimalaiseenivasan’s Paraiyan.Poonjolaimuthuveeranaavalar was a social activist and mentor of Dalit pioneers M C Raja and Swami Sagajanandar. Under his stewardship, Pulokaviyaasan reflects the voices of various dalit groups of that time, that are illustrious and contradicting each other.Not a single copy of Pulokaviyaasan which was published from 1903 – 1917 was available for a long time. Finding the 1909 yearly collection, J. Balasubramanian, who has written a comprehensive history of Tamil Dalit magazines, has published this book.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Boologaviyaasan

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹140


Tags: Boologaviyaasan, 140, காலச்சுவடு, பதிப்பகம்,