• பவுத்தம்: ஆரிய திராவிட போரின் தொடக்கம்
மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல்! - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இந்தியச் சமய வரலாற்றில் பவுத்தம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்சனையை நூலாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். பவுத்தம் என்பதை பொதுமைப்படுத்திப் பார்க்காமல் அதில் உருவான பிரிவுகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது. - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் புத்தரின் மூல உபதேசங்களை அறிய விரும்புகிற எவரும், அந்தப் பெரு நெருப்பை மூடி மறைக்கப் போடப்பட்ட துணிகளைக் காண விரும்புகிற எவரும் இந்த நூலை அவசியம் படித்தாக வேண்டும். அருவிபோல நேரடியாக மனசுக்குள் இறங்கும் சரசர நடையில் இதை ஆசிரியர் ஏழுதி இருக்கிறார். - பேராசிரியர் அருணன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பவுத்தம்: ஆரிய திராவிட போரின் தொடக்கம்

  • ₹166


Tags: bowtham:aariya, dravida, porin, thodakkam, பவுத்தம்:, ஆரிய, திராவிட, போரின், தொடக்கம், எழில் இளங்கோவன், வானவில், புத்தகாலயம்