உங்களுடன் தங்கள் பிசினஸ் சாம்ராஜ்யத்தின் சிகரங்களைத் தொட்ட 44 வெற்றியாளர்களின் வெற்றி ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறது இந்தப் புத்தகம்.எனக்கு வெற்றி வேண்டும். சிக்கலில் மாட்டிவிடக் கூடியதாக இல்லாத நேர்மையான வழிகளில் என் வெற்றிகளைப் பெருக்க வேண்டும். அதற்கு வழி இருக்கிறதா? இப்படிக் கேட்பவரா நீங்கள்? இப்படிக் கேட்பவர்களுக்காகவே இந்தப் புத்தகம்..
தண்ணீரைச் சல்லடையில் அள்ளலாம்... அது உறையும்வரைப் பொறுமையாக உங்களால் காத்திருக்க முடிந்தால்... எனவே தண்ணீரையாவது சல்லடையில் அள்ளுவதாவது என்று சொல்பவர்களை விட்டு விலகி வாருங்கள்.
தண்ணீர் உறையும்வரைக் காத்திருக்க உங்களுக்குப் பொறுமை இல்லையென்றால் தண்ணீரை வேகமாக உறைய வைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்றாவது நீங்கள் யோசிக்கலாம் இல்லையா? அம்மாதிரியானதொரு முயற்சிக்கு உங்களைத் தூண்டுவதுதான் இந்தப் புத்தகம். நீங்கள் தினமும் வேதம் படிப்பவராக இருந்தாலும்... அதற்கு விளக்க உரை கேட்பவராக இருந்தாலும்... அதேபோன்ற வழியாக இதையும் உங்கள் அன்றாடக் கடமைகளில் ஒன்றாய்ச் சேர்த்துக் கொண்டு தினமும் படியுங்கள்.
நீங்கள் இந்தப் பழக்கத்தை மட்டுமல்ல. வெற்றியையும் சேர்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
பிசினஸ் வெற்றி ரகசியங்கள்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹166
Tags: business, vetri, ragasiyankal, பிசினஸ், வெற்றி, ரகசியங்கள், டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications