ஸ்ரீமத் இராமயண நாயகனின் துயர் தீர்த்தவர் ஆஞ்சநேய ப்ரபு. இன்றும் ராம நாமத்தின் மகிமையை இக்கலியுகத்தில் நமக்கு போதிக்கும் குருநாதர் அவர். ஸ்தோத்ரப்ரியர் ஆன அவருக்கு வழிபாடு அவர் குணம் பாடுவது தான். அப்படிப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேய மஹாப்ரவுவின் குணப்ரவாகங்களை அவரின் ஸஹஸ்ரநாமாவில் காணலாம். சாதரணமாக எந்த கடவுளுக்கான ஸஹஸ்ரநாமா ஆனாலும் அவைகள் மந்திர ரூபகாமக் கொள்ளப்படுகிறது. ஒலியின் உச்சாரங்களில் உள் உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இதற்கு ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம் விதிவிலக்கல்ல. இதனால் "ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம்" படிப்பவர்கள் அதன் முழுப்பலனை அடைய நாங்கள் அரு முயற்சி செய்து "ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம்" என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம்.